Pan India Blockbuster என்று சில்லறையை இப்போதே சிதறவிட வேண்டாம்


இன்னிக்கு ஒரு படம் Pan India Blockbuster ஆகணும்னா உத்தர்பிரதேஷ், பீகார், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்ல அதிக அளவு ப்ரமோஷன் செய்யணும், இந்தி நடிகர்கள் சிலரும் படத்துல முக்கிய வேஷங்கள்ல நடிக்கணும். அப்போ தான் 1000 கோடி எல்லாம் எதிர்பார்க்க முடியும். RRR, Pushpa, KGF2 - இந்த மூணு படங்களும் அப்பிடி தான் தீவிரமா பல மாதங்களா மார்க்கெட்டிங் செஞ்சாங்க. 600-1000 கோடிக்கு மேல வசூல் வந்துச்சு. அதெல்லாம் இல்லாம சும்மா 1000 கோடி அது இதுன்னு எதிர்பார்க்காதீங்க மக்களே. (அப்படியே வந்துட்டா நாம தல கால் புரியாம குதிப்போம், அது வேற விஷயம்)

ஆனா தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் நமக்கு இப்ப ஒரு Pan South India Blockbuster கெடைச்சாலே அது பெரிய சாதனை தான். அதாவது தென்னகத்தில் உள்ள எல்லா மாநிலங்கள்லயும் படம் நல்ல வசூல் செஞ்சு ஓவர்ஸீஸ்லயும் நல்லா கல்லா கட்டினாலே 300+ கோடி உறுதி. என்னுடைய நினைவில் அப்பிடி மொத்த தென்னகத்துல எல்லா மாநிலங்களயும் மிகப்பெரிய வசூல் செஞ்ச படம் (நஷ்டம் கொடுக்காம) கடந்த பத்து வருஷமா எதுவும் இல்ல. இப்ப உள்ள நிலவரப்படி தென் மாநிலங்கள் அனைத்திலும் விக்ரம் படத்துக்கு நல்ல ஹைப் இருக்கு. விமர்சங்கள் நல்லா இருந்துச்சுன்னா ஆந்திரா, தெலங்கானா, கேரளா இந்த மூணு ஸ்டேட்லயும் தமிழ் சினிமா இதுக்கு முன் செஞ்ச ரெகார்ட் எல்லாத்தையும் உடைக்க வாய்ப்பு இருக்கு.

Reply · Report Post