இந்த வருட சங்கீத கலாநிதிக்கு தேர்வாகி இருக்கும் கலைஞரைப் பற்றிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டுத்தொலைத்தது. ”முகாரியும் அழகு மூக்குத்தியும் அழகு” என்று தலைப்பு.

கட்டுரையின் பாடகியின் திறமையைப் பற்றி சில விஷயங்கள் இருந்தனஎன்றாலும், ஜனகரஞ்சகத்துக்காக மேக் அப் சமாசாரங்களும், ஆபரண விவரங்களும் அவற்றுடன் வருவது மிகவும் நெருடலாக இருந்தது.

இதற்கு முன்னால் விருது வாங்கிய ஆண் கலைஞர்களைப் பற்றி “ஒத்தக் களை பல்லவியும் அழகு ; ஒமேகா வாட்சும் அழகு” என்று அன்னார் எழுதியிருப்பாரா என்கிற கேள்வியும் வருகிறது.

கச்சேரி கேட்க மக்கள் வர என்னென்னமோ காரணங்கள் இருக்கலாம். இறைய நிலையில் கர்நாடக சங்கீதத்தின் உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளதைப் பற்றி குறிப்பிடும் போது இது போன்ற மேற்பூச்சுகளைப் பளீரிடவைக்கும் போது, தேர்வாகியுள்ளவரை வாழ்த்திப் பன்னீருடன் சேர்த்து கொஞ்சம் சேற்றையும் இறைத்ததுபோலத் தோன்றுகிறது.

Reply · Report Post