காதல் விளையாட்டல்ல,. யார் வாழ்க்கையிலும், உணர்வுகளோடு விளையாடாதீர்கள்..! 🙏🙏🙏


யாருனே தெரியாத ஒரு ஆண், யாருனே தெரியாத ஒரு பெண் மேலையும், யாருனே தெரியாத ஒரு பெண், யாருனே தெரியாத ஆண் மேலையும் முதல் சந்திப்புலையே பிடிச்சி போயி காதல் திருமணம் செய்ததுண்டு,

இது அனைவரின் வாழ்க்கைக்கும் பொருத்தமானதானு கேட்டா, என் தரப்பில் இருந்து தவறு என தான் கூறுவேன்,.

பெற்றெடுத்து இத்தனை வருடம் வளர்க்க பாடுபட்ட பெற்றோரை நினைத்து பார்க்காமல், எங்கிருந்து வருகிறது இந்த காதல் என்று ஏதோ நானும் கேள்வி கேட்கனும்ன்ற முறைல நான் கேட்க விரும்பவில்லை,

தன்னை வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுத்தாம, சந்தோஷமா வைத்துக்கொள்வான்/ள் என்ற எண்ணம், ஒரு நாளுக்கு மூனு முறை அவன் அவளிடம், அவள் அவனிடமும் சாப்டியானு கேட்டாலே தோன ஆரம்பிச்சிருது இந்த காலத்துல,

ஆனா அதுலதான் மொத்த காதலும் அடங்கி இருக்குனு நம்புறது மிக பெரிய முட்டாள்தனம்றது தான் மறுக்க முடியாத உண்மை,

நாலு மாசம் போட்டுக்க போர ஒரு ட்ரெஸ்ஸ எடுக்க, நாலு கடை ஏறி இறங்குற நாம,

வாழ்க்கை முழுசும் கூடவே வரபோர வாழ்க்கை துணைய பார்த்தவுடன் தேர்வு செய்துவிட்டு, காலம் முழுவது அவதிபடுவது வருத்தத்திற்குறிய ஒன்று,.
________________________________________
#ஒரு_உண்மை_சம்பவம்

அவன் தான் என் வாழ்க்கைனு, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இருந்த ஒரு தோழி இப்ப என் கூட இல்ல, இறந்துட்டா,

உயிருக்குயிரா காதலிச்சிட்டுருந்தாங்க ரெண்டு பேரும், அவன் இல்லனா அவ செத்துருவானு தெரிஞ்சும் திடீர்னு ஒருநாள் நாம பிரிஞ்சிரலாமுனு அவன் சொன்ன வார்த்தைக்கு அப்பரம் அவ உயிரு அடுத்த நாள் வரைக்கும் கூட நிலைக்கல,. 😢
__________________________________________

அவள் ஒரு சமூக சேவை செய்யும் தேவதை, யாருமே இல்லாதவங்களுக்கு நான் இருக்கேனு சொல்லி, ஒவ்வொருத்தவங்க மேலையும் அன்பா இருந்த ஒரு பெண்,.

இப்போ எல்லாரும் அந்த அன்பை இழந்துட்டு, அழுதுட்டு இருக்காங்க ஒவ்வொரு நிமிஷமும் அவள நினச்சி
_____________________________________

இனி காதல் செய்ய போரவங்களா இருந்தாலும் சரி, இப்போ காதலிச்சிட்டு இருக்குறவங்களா இருந்தாலும் சரி, அவங்க இல்லனா செத்து போயிரனும்னு போகுர மன நிலைக்கு மட்டும் போயிராதிங்க,. 🙏🙏🙏🙏

காதல் செய்ங்க தப்பில்ல, யாருனே தெரியாதவங்க மேல அன்பு வைங்க தப்பில்ல, ஆனா உங்களுடைய காதலுக்கும் அன்புக்கும் தகுதியுடையவங்களா அவங்கனு முதல, ஒரு தடவைக்கு நூறு தடவ சிந்திச்சிட்டு அப்பரம் முடிவு பன்னுங்க,. 🙏🙏

ஃபீலிங் அதிகமாகிருச்சி அதான் பெருசா எழுதிட்டேன் 🙏🙏🙏

உங்களின் கருத்துக்களை பகிரலாம் 🙏

Reply · Report Post