அதிமுக அரசும் - வேலையில்லா திண்டாட்டமும்


கடந்த ஐந்தாண்டுகளில் உங்கள் கிராமத்தில் படித்து முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்து வேலை கிடைக்காமல் பெங்களூர், ஹைதராபாத், கேரளா, வெளிநாடு என வேலை பார்க்கும் பசங்களை பார்த்திருப்பீர்களெனில் நிச்சயம் உங்களுக்கு தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் புரியலாம், முக்கியமாக கட்டுமான துறை எனப்படும் சிவில் துறை, அனைத்து தொழில்களுக்கும் ஆதாரமான சிவில் துறை கடந்த ஐந்தாண்டுகளில் அதரபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பதே நிதர்சனம், அதில் வேலைவாய்ப்பு என்பதே குதிரைக்கொம்பாகி விட்டது, ஐடி மற்றும் மெக்கானிக்கல், கெமிக்கல் துறைகளை பற்றி சொல்லவேவேண்டாம், சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தில் இருந்து வெளியேறிய கம்பெனிகளின் எண்ணிக்கை பலநூறை தாண்டும், அவர்களின் வெளியேற்றத்திற்கு முக்கியமான காரணம் அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததே.. இதில் ஐடி துறை பற்றி குறிப்பிட்டேயாகவேண்டும் 90 களின் ஆரம்பத்தில் இந்தியாவுக்குள் ஐடி நிறுவனங்கள் படையெடுத்து வந்த நேரத்தில் அவர்களின் முதல் தேர்வாக இருந்தது சென்னை நகரம், ஆனால் அப்போதிருந்த அதிமுக அரசு நிலம் ஒதுக்குதல் போன்ற எந்த ஒத்துழைப்பையும் அளிக்காததால் வெறுப்பில் இருந்த அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார் அப்போதைய கர்நாடக முதல்வர், அதுவே பெங்களூர் ஐடி தலைநகர் ஆக முதல் காரணம், மீண்டும் 96ல் கழக ஆட்சி வந்ததும் ஐடி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக்கொடுத்து அவர்களை மீண்டும் சென்னை நோக்கி படையெடுக்க வைத்தது அப்போதைய திமுக அரசும், முதல்வர் கலைஞரும், அப்போதைய சென்னை மேயர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் முரசொலி மாறனுமே! அவர்களின் முயற்சியில் வளர்ந்ததே இன்றைய OMR எனப்படும் ஐடி ரோடு.. இன்று OMR ல் அமர்ந்து கொண்டு திமுகவை வசைப்பாடும் OMR போராளிகளுக்கு தாங்கள் அங்கு அமர்ந்திருக்க காரணமே திமுகதான் என்பது தெரியாததுதான் ஆச்சரியம்.. இதே நிலைமைதான் மெக்கானிக்கல் துறைக்கும், ஆசியாவின் டெட்ராய்ட் என பெயர் பெறும் அளவிற்கு சென்னை கார் உற்பத்தியில் முண்ணனி பெற முக்கிய முழுமுதற் காரணம் திமுக அரசே. ஒரே அரசாங்கத்தின் முக்கிய கடமை வேலைவாய்ப்பு உருவாக்குவது, அந்த விதத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் இந்த அரசாங்கம் உங்கள் பகுதிகளில் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் எத்தனை என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், ஏதுவும் இருக்காது, ஏனெனில் ஒட்டுமொத்தமாக செயல்படாமல் இருந்ததே இந்த அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம்,இரண்டாண்டுகளாக 37 எம்பிகளை கொண்ட கட்சி நாடாளுமன்றத்திலோ மத்திய அரசிடனமோ எந்த திட்டங்களையும் கேட்டுப் பெறவில்லை என்பதே உண்மை, இவர்கள் அதிகபட்சமாக தமிழ்நாட்டிற்காக கேட்டது "அம்மா ரயில்" மட்டுமே, மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத தலைவி, தலைவலிக்கு ஜால்ரா அடிப்பதே கடமையென வீற்றிருக்கும் அமைச்சர்கள், இதை தவிர வேறென்ன உண்டு இந்த ஆட்சியில்... மீண்டும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் தமிழ்நாட்டில் போய் வேலைப் பார்க்கலாம் என்ற வெளிமாநில, வெளிநாடுவாழ் இளைஞர்கள், மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் கனவு அதிமுக ஆட்சியில் கனவாகவேதான் இருக்கும் என்பதே நிதர்சனம்

Reply · Report Post