NChozhan

NaSo · @NChozhan

28th Jun 2013 from TwitLonger

இன்றைய சிந்தனை:

ஒரு ஊரில் ஒரு விவசாயி பண்ணை வைத்து நடத்தி வந்தார். ஒரு நாள் அவருடைய கைக்கடிகாரம் தொலைந்து போய்விட்டது. அது அவருக்கு செண்டிமெண்டான கடிகாரம் என்பதால் மிகவும் கவலைப்பட்டார்.

எல்லா இடங்களிலும் தேடினார் கிடைக்கவில்லை. பின் பண்ணைக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை கூப்பிட்டு கடிகாரத்தை கண்டுபிடித்தால் பரிசு தருவேன் என்றார்.

உடனே எல்லா சிறுவர்களும் நன்றாக பண்ணையில் தேடினார்கள். ஆனால் அவர்களுக்கும் கடிகாரம் கிடைக்கவில்லை. சோர்ந்துபோய் கடிகாரம் அவ்வளவுதான் என்ற மனநிலையில் சிறுவர்களை அனுப்பினார் விவசாயி.

அப்போது ஒரு சிறுவன் மட்டும் எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு தாங்க என கேட்டான். சரி தந்து பார்ப்போம் என அனுமதி தந்தார் விவசாயி.

அந்த சிறுவன் சிறிது நேரத்தில் கடிகாரத்துடன் வந்தான். ஆச்சரியத்துடன் எப்படி கடிகாரம் கிடைத்தது என விவசாயி கேட்டார்.

நான் எதுவும் செய்யவில்லை. தரையில் உட்கார்ந்து கவனமாக கேட்டேன். கடிகாரத்தின் டிக் டிக் ஓசை கேட்கும் இடத்தை கவனித்து அந்த திசைக்கு போய் கண்டுபிடித்தேன் என்றான் சிறுவன்.

ஆரவாரமான, குழப்பமான மனதை விட அமைதியான மனது சிறப்பாக காரியங்களை சாதிக்கும். தினமும் உங்கள் மனதை சில நிமிடங்கள் அமைதியாக்குங்கள். பின் அது உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ எப்படி உதவுகிறது என பாருங்கள்!!

நன்றி: கூகிள் மற்றும் இணையம்

Reply · Report Post