ரமாதேவி!

சமீப காலமாக ஊடகத்தில் இப்பெயரை கேள்விபட்டிருப்பீர்கள்.
நான் கூட முன்பே இவரை பற்றி ஒரு கீச்சினை பதிவு செய்துள்ளேன்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், அ.ராமலிங்காபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

ஐ.நா. சபையில் பங்கேற்றுப் பேசிய முதல் அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

ஐ.நா. சபைத் தலைவர் பான்-கி மூன் தலைமையில் நடைபெற்ற ஆண்-பெண் சமத்துவம் குறித்த பேரணியில் கலந்துகொண்ட இவர், ‘பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைதல்’ என்ற தலைப்பில் உரையாற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

ஐநா சபையில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து , கல்வித்துறையை சேர்ந்த 17 பேர் பங்கேற்று பேசினர். அதில் ஆசிய நாடுகளில் இந்தியாவை சேர்ந்த அதுவும் நம் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஆசிரியை ஆர்.ரமாதேவி என்பது குறிப்பிடத்தக்கது .

நண்பர் வித்யாராணி (@VidhyaraniV) அவர்கள் ரமாதேவி அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அவர் சொன்ன தகவல் தனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்ததாக கூறினார்.

அது எனக்கு அதிர்ச்சியை அல்ல, ஆயாசத்தையும், கோபத்தையும், சமூக கட்டமைப்பின் மீதான எரிச்சலையுமே தந்தது.

நண்பர் வித்யாராணி அவர்கள் சொன்ன விசியத்தின் சாரம்சம் இதுதான்...

ரமாதேவி அவர்கள் பணிபுரியும் பள்ளி ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் வாழும் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அப்பகுதியை சேர்ந்த உயர்ஜாதி மாக்கள் தம் குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்புதில்லையாம். சில கி.மீ தள்ளியுள்ள பக்கத்து ஊர் பள்ளிக்கு அனுப்புகிறார்களாம்.

தமிழகத்தின், இந்தியாவின், ஆசியாவின் குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய ஒரு ஆசிரியரை ஐ.நா விற்கு அனுப்பிய ஒரு பள்ளிக்கு,
ஜாதிய காரணத்தால் தம் குழந்தைகளை படிக்க அனுப்ப மறுக்கும் அறிவிலிகளை என் சொல.

பி.கு:
சரி நமக்கெதுக்கு இதுலாம், நமக்குத்தான் இருக்கிறதே மாபெரும் வாழ்வாதாரப் பிரச்சனையாம் கிரிக்கெட்டும், சினிமாவும். நாம் அதன் பின்பேயே தொங்கிக்கொண்டிப்போம் வழக்கம் போலவே!
Reply · Report Post