மதுரை சோமு அவர்கள் பாடிய ‘மருதமலை மாமணியே’ பாடலைப் பற்றி பல கதைகள் உண்டு. அவை நிஜமா என்று ஆராய்தல் அவசியம்.

உதாரணமாக ஒரு கதை, பாடல் பதிவின் போது குன்னக்குடி வைத்தியநாதன் சொன்னதை எல்லாம் வாங்கிப் பாடிய போதும் ஏனோ அது பாடகருக்கும் இசையமைப்பாளருக்கும் திருப்தியாக அமையவில்ல. மீண்டும் மிண்டும் பதிவு செய்த போதும் நினைத்தபடி அந்தப் பதிவு அமையவில்லை. திடீ்ரென்று குன்னக்குடி வைத்தியநாதனுக்கு பொறி தட்டியது.

சோமு அவர்களுக்கு எப்போதும் கூட்டத்துக்கு மத்தியில்பாடித்தானே பழக்கம். யாரும் இல்லா ஸ்டுடியோவில் பாடினால் வழக்கமாய் பாடும் சௌகரியம் இருக்காதல்லவா? முன்னால் இருப்பவர் தலை அசைத்தால்தானே சோமுவிற்கு கற்பனை சுரக்கும்!

இதை உணர்ந்ததும், நல்ல தேர்ந்த ரசிகர்களாய் பத்து பேரை அழைத்து ஸ்டுடியோவில் அமர வைத்து சோமுவைப் பாடச் சொன்னார். என்ன ஆச்சரியம் - ஒரே டேக்கில் இசையமைப்பாளர் நினைத்ததைவிட சிறப்பாக அமைந்தது அந்தப் பதிவு.

இந்தக் கதை கேட்க சுவாரஸ்யமாகவும், நம்பும்படியாகவும் உள்ளது. இருப்பினும் உண்மைக்கும் இதற்கும் ஸ்னானப் ப்ராப்தி கிடையாது.

இந்தப் பாடல் உருவான போதும், பதிவான போதும் அருகிலேயே இருந்து, அந்தப் படக் காட்சியிலும் தம்புரா கலைஞராகத் தோன்றியவரும் சோமுவின் சீடருமான மழையூர் சதாசிவம் அவர்களிடம் பேசினேன்.

இந்தக் கதை - கதைதான் என்கிறார் திரு.சதாசிவம்.

“சோமு ஐயா காட்டாற்று வெள்ளம். குறிப்பிட்ட நிமிட வினாடிகளுக்குள் அவர் பாட்டை நிறுத்துவதற்காக மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டி வந்தது. மறுபதிவுகளுக்கு வேறு காரணம் இல்லை”, என்கிறார்.

சில சமயங்களில் உண்மை சுவாரஸ்யத்துக்கு இடஞ்சல்தான்.

#Somu100

Reply · Report Post