இந்தமுறை தலைநிமிர்ந்து உரக்கச் சொல்கிறேன்.. ஜெய்பீம் !!



உங்கள் கோரமான, வனமத்தோன்றி கீபோர்டுகளானது, ஒதுங்கிச்சென்றாலும் என்னை விடாது துரத்தியடிக்கும் போலும்..
இந்தத்தளம் வேண்டாமென, விலகிச்சென்றபின் இன்றுகாலை முகபுத்தகத்தில், நான் இட்ட பதிவை வைத்து, மீண்டும் எனை பரிசோதனை எலியாக்கி, உள்ளமெல்லாம் தாழ்வு பீடித்த, நோய்க்கூறுடைய, சீழ் பிடித்த மனநிலையாளன், மற்றும் சில்லறப்பய, என பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை வெளிவிட்டு விவாதித்திருக்கிறீர்கள் என என் நண்பர்கள் மூலமாக அறிந்துகொண்டேன். விவாதித்த அனைவருக்கும் மிக்க நன்றி !!

உங்கள் விவாதம் என் இறுதிச்சுற்று பதிவு குறித்து தானே?
ஒரு படைப்பை தன் எல்லா சிந்தனைகளிலிருந்தும் கட்டமைத்து சமர்ப்பிக்க எப்படி ஒரு படைப்பாளிக்கு உரிமை இருக்கிறதோ அதேபோல அந்த படைப்பை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய பார்வையாளனுக்கும் உரிமை இருக்கிறதுதானே? இதில் எங்கிருந்து வந்தது தாழ்வு மனப்பான்மை மற்றும் சில்லறைத்தனம்? எனக்குப் பிடித்த என்னால் எளிமையாக அணுக முடிந்த என் ஒரே பொழுதுபோக்கு சினிமா.. அதில் எனக்கு புரியவந்த, என் பார்வையிலான கோணங்களை நான் என் தளத்தில் சொல்வதில் பதறித்துடிக்கும் உங்கள் அரசியல்தான் என்ன? உங்கள் அரசியல் தாக்குதல்களுக்காக திரும்ப திரும்ப எனது கோணங்களை விளக்கிச்சொல்ல ஆயாசமாகத்தான் இருக்கிறது இருந்தும் சொல்கிறேன்.

வேட்டைக்காரன் எழுதும் சிங்கத்தின் கதைக்கும், சிங்கம் எழுதும் சிங்கத்தின் கதைக்கும் நிறைய வித்யாசமிருக்கிறது,, நீங்கள் சக வேட்டைக்காரர்களாக அதை ரசிக்கும் வேளையில், வதைபட்டு பிடிப்பட்ட அந்த சிங்கத்தின் இடத்திலிருந்து சிங்கமாக ( சிங்கம்னாலும் கோவிச்சுக்குவீங்க… ) சரி ஒரு மிருகமாக அந்த திரைப்படத்தை பார்த்தேன். எனது எதிர்விமர்சனத்தை வைத்தேன். அது ஒரு தவறா? இதே திரைப்படத்தை உங்களைப்போல சக வேட்டைக்காரர்கள் மன நிலையில் என்னால் வேறுவிதமாகவும் அணுக முடியும். என நிருபிக்க இந்த சுட்டியை இணைக்கிறேன்,

( இறுதிச்சுற்று - செங்கிஸ்கானின் தமிழ்சினிமா
http://karnasakthi.blogspot.com/2016/02/blog-post.html?spref=tw )

இப்படி உங்கள் ஆதர்சங்களை பாராட்டி எழுதினாலும், இன்னொரு வகையான வன்மமாக, இந்தப் பார்வை பெண்ணியப்பார்வை, இவனொரு எனி ஹெல்ப் சாலினி என உங்களால் ட்ரோல் மட்டுமே செய்ய முடியும் என்பதையும் என்னால் தெளிவாக உணரமுடிகிறது,,, அதையும் செய்து கொள்ளுங்கள்,, முடங்கிவிடும் மனநிலையைத் நான் தாண்டி வந்து வெகு நேரமாகிறது, இனி எப்போதும் நான் முடங்கியோ அடங்கியோ போகப்போவது இல்லை. உங்கள் தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

செய்வதை துணிந்து செய்.. முடங்கிவிடுவதென்பது எதற்க்கும் தீர்வல்ல..
அவர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிரார்கள். துணிந்து வா இன்னும் தீவிரமாக எதிர்ப்போம், நாங்கள் இருக்கிறோம், என ஆயிரம் அன்பும், அக்கறையும், காட்டிய என் அத்தனை நண்பர்களின் பேரன்பிற்க்காவும், வேண்டுகோள்களுக்காகவும் நான் மீண்டும் வந்திருக்கிறேன். இல்லை இல்லை இங்கேயேதான் இருக்கப்போகிறேன்.

முடிஞ்சத செய்ங்கடா பொடிப்பசங்களா...

இந்த முறையும் இனி ஒவ்வொரு முறையும்..
தலை நிமிர்ந்து உரக்கவே சொல்வேன்… ஜெய்பீம் !!.

Reply · Report Post