dagalti

dagalti · @dagalti

5th Feb 2016 from TwitLonger

அலுவலக ஃபுட்-கோர்ட்டில் கேட்ட உரையாடல்



P1: ஊர்ல யாரோ இறந்துட்டாங்கன்னு பொய் சொல்லிட்டு போயிருச்சு.
P2: ஹ்ம்ம்
P1: வேலை புடிக்கலையா என்னன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்ல, பல வகைல கேட்டுப் பார்த்தும் கடைசி வரைக்கும் சொல்லல
P2: சரி விடு
P1: நான் ஃபோன் பண்ணி அவன் அண்ணன் கிட்டயே கேட்டுட்டேன். அதுக்கப்புறம் இவளைக் கேட்டா, அப்படியே ப்ளேட்டை மாத்திருச்சு
P2: ஓ!
P1: இப்படி பொய் பேசுறவளை நம்பி வீட்டையும் குழந்தையும் விட்டுட்டு இருந்திருக்கோமேன்னு நினைச்சு வொய்ஃபுக்கும் எனக்கும் நேத்து தூக்கமே வரலை
P2: சரி விடு, ஒழிஞ்சுதுன்னு நினைச்சுக்க
P1: இல்லடா, ஏதாச்சும் எடுத்துட்டு போயிருப்பாளோன்னு தோணுது
P2: ச்ச, அதெல்லாம் இருக்காது
P1: இல்லை, பால், காபித்தூள் எல்லாம் சீக்கிரம் சீக்கிரம் தீர்ந்துரும்..கீழ்வீட்டுக்காரியோட பேசிகிட்டே இருக்கும்.
P2: ஹ்ம்ம்
P1: என் மாமியார் போய் கேட்டிருக்காங்க ‘ஏம்மா உன்னை நம்பி தானே அனுப்பினோம், விட்டுட்டு வேலைக்கு எல்லாம் போனாங்க. இப்படி பண்றியே. எப்பவும் உண்மையா சம்பாரிக்கிறது தான் நிக்கும்’ அப்படின்னும் சொல்லிப் பார்த்துருக்காங்க. எதுவுமே பேசலையாம்.
P2: சரி வேற ஆளப் பார்த்துக்க
P1: இனிமே டே கேர்ல எதுலயாவது விட்டுறலாம்னு இருக்கோம்

P2: ****க்கு **** யுனிவர்ஸிடில அப்பாயிண்ட்மண்ட் ஆயிருச்சு தெரியுமா?
P1: அப்படியா?
P2: ஆமாம் போன வாரம் தான் ஆச்சு.
P1: ஓஹோ
P2: பதினஞ்சு ஆயிருச்சு.
P1: லட்சமா?
P2: ஆமாம். வீசி எங்க தூரத்து ரிலேஷன் தான்.
P1: ஹ்ம்ம்
P2: அதா நேரா வாங்கலை. ஒரு ஸ்கூல் வாத்தியார் ஒருத்தர் இருக்கார், அவர் மூலமா போனது.
P1: சம்பளம் எவ்வளவு?
P2: முப்பத்தஞ்சாயிரம்.
P1: அவ்வளதானா?
P2: பிஹெச்டி'க்கு ரெஜிஸ்டர் பண்ணிட்டா இன்க்ரீஸ் ஆகும்
P1: இருந்தாலும் முப்பத்தஞ்சாயிரத்துக்கு பதினஞ்சு கொஞ்சம் ஓவர் இல்லை?
P2: இல்ல, இப்ப ஸெவந்த் பே கமிஷன்ல அறுவதாயிரம் ஆயிருமாம். அதான் முடிச்சு விட்டோம்.
P1: ஓ ஒகே.

Reply · Report Post