234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டால், பேரவையே அ.தி.மு.க. பேரவையாகி, சட்டப்பேரவையில் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா? ஜனநாயகமும் விடை பெற்றுச் சென்று விடும் அல்லவா?

தமிழகத்திலே உள்ள 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டுமென்று ஜெ. அன்புக் கட்டளை விடுத்திருக்கிறாரே?
அதுவும் “கட்டளை”தானா? “வேண்டுகோள்” கிடையாதா? போகட்டும்! 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டால், பேரவையே அ.தி.மு.க. பேரவையாகி, சட்டப்பேரவையில் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா? ஜனநாயகமும் விடை பெற்றுச் சென்று விடும் அல்லவா? பின்னர் எல்லா நேரங்களிலும் பாராட்டு மழையிலேயே நனைந்து மகிழலாம்! எதிர்க்கட்சிகள் இருக்கும்போது மட்டும் என்ன? எதிர்த்துப் பேசவா முடிகிறது? எதிர்க்கட்சிகளை கூண்டோடு வெளியேற்றி விட்டு அல்லவா பேரவை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன!

கேள்வி :- ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அவர் தலைமை ஏற்ற நாளில் இருந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுத் தந்திருப்பதாகக் கூறுகிறாரே?

அவருக்கு முன்பு அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்றிருந்த எம்.ஜி.ஆர். காலத்தில் வெற்றிகளைப் பெற்றுத் தரவில்லை என்பதையும், இவர்தான் வெற்றிகளைப் பெற்றுத் தந்திருப்பதாகவும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் போலும்!
‪#‎TNAssembly‬ ‪#‎DMK‬ ‪#‎Kalaignar‬ ‪#‎Oppostion‬ ‪#‎Karunanidhi‬

Reply · Report Post