இறந்த 3 அப்பாவி பெண்களுக்காக - முழுதாய் படித்து பகிறவும்
மாணவிகளின் பெரயர்களைமோனிசாசரண்யாப்ரியங்கா என பட்டியலிட்டு கூற தெரிந்த காவல் மற்றும் ஊடக துறைக்கு கல்லூரி மட்டும் தனியார் நிறுவனமாக தெரிந்திருக்கிறது நியாயம் நீதியின் பக்கமா இல்லை நிதியின் பக்கமா என்பது அப்பட்டமாக...கொலையா தற்கொலையா என ஊர்சிதமாகாத வழக்கின் அனுமான ஊடக வெளியீடு கூட கல்லூரியின் எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளின் சடலங்கள் மீட்பு என்பதிலும் திறம்பட செயல்பட்டிருக்கிறது நீதியை மிஞ்சிய நிதியின் ராட்சத விளையாட்டு...

இந்த சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் ஐயம் தெரிவித்த பின் மாவட்ட ஆட்சியாளரால் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டதென்பது கேள்வியாக கேட்கப்படாவிட்டால் கொடுப்பதை வாங்கிவிட்டு கொல்லியிட்டு இருக்கும் அரசாங்கமும் அதிகாரிகளும் இந்த பிரச்சினையை... அனுமானத்தின் பெயரில் கல்லூரி முதல்வர் கலா"நிதி"யை கைது செய்த காவல்துறை ஆசையின் பெயரால் நிதியை மட்டும் வைத்துக்கொண்டு கலா வை விடுதலை செய்துவிடுமா என்பதில் அனுமானம் ஏதுமில்லை ஆணித்தரம் இருக்கிறது அடிமனதில்...கல்லூரி,,,இல்லை இல்லை பெயரற்ற தனியார் கல்லூரியின் நிர்வாகி வாசுகியின் மகனும் மாணவருமான சோகர்(சேகர்??? சோகர்???)வர்மாவையும் கைது செய்தனர் விசாரணை நடத்தி வருகின்றனர்....வெளியில் கூறுவது விசாரணையாகவும் உள்ளே நடத்துவது பேரமாகவும் இருந்தால் தெரியவா போகிறது அப்பாவி அப்பா அம்மாவுக்கு...தற்பொழுது இந்த 3 அப்பாவி மாணவிகளின் மர்ம மரண (அதாவது கல்லூரி,காவல்துறை,ஊடகத்தின் பார்வையில் தற்கொலை என கருதப்பட்டு கொண்டிருக்கும்) சம்பவத்தின் அடுத்த ஆச்சரியமான ஆதாரமாக வெளியிடப்பட்டிருக்கும் இறந்த மூன்று மாணவிகளின் சுய வாக்குமூல கடிதம் இல்லை புத்தக குறிப்பு... இதோ உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது....அதென்ன ஆச்சரியமான ஆதாரம் என்று கேட்க்கிறீர்களா....ஆம் ஆச்சரியமானது தான்...சடலமான சகோதரிகள் எவ்வளவு மன உலைச்சலுக்கு ஆளாகி இருந்தும் அவர்களின் எழுத்துக்களில் ஒரு துளி கூட வன்மமோ கோபமோ பதற்றமோ இல்லாமல் கடனுக்கு(வேறு யாராலோ) எழுதப்பட்டிருப்பது போன்றோதொரு புத்தக குறிப்பு ஆச்சரியமானதாக தானே தெரிகிறது....


இது மூளையற்ற முட்டாள்களையும் சிந்திக்காமலே கண்டுபிடிக்க வைக்கும் கொலையை மறைக்க கையாடப்பட்டிருக்கும் நாடகம் என்று....சடலங்கை கைபற்றிய தருணத்திலேயே எந்த ஒரு ஆதாரமுமின்றி இது தற்கொலை என குறிப்பட்டது ஊடகத்துறை விலை போயிருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது...சடலமான சகோதரிகளின் புத்தக குறிப்பில் (காவல்துறை மற்றும் ஊடகத்தால் வாக்குமூலம் என கூறப்படுவது) இருந்து சில கேள்விகள் :-இந்த கல்லூரியில் நிறைய கட்டணம் வசூலிக்கின்றனர் வசூலித்த அளவுக்கு பாட பயிற்சிகள்(coaching) பயிற்றுவிக்கப்படவில்லை பயிற்றுவிக்க பயிற்றுவிப்பாளர்களும்(Professor's/Coachers) இல்லை/ஒரு கல்லூரிக்கு தேவையான மேலான முக்கியவைகள் இல்லாமல் இப்படிப்பட்ட கல்லூரிகள் தேவையா நாட்டுக்கு....இதை பலர் குறையாக கோரிக்கை(complaint) இட்டும் ஒரு மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை எந்த பயனும் கிட்டவில்லை இங்கு நாங்கள் பயின்றதை விட வேலைகள் பல செய்து அயன்றது தான் அதிகம்/கொத்தடிமைகளை பணம் வாங்கி பாட சாலை என்ற பெயரில் சிறைச்சாலை நடத்துவது அவசியமா நாட்டுக்கு...இங்கு பயில்வதால் எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் மன அழுத்தம் அதிகமானது கல்லூரி நிர்வாகி வாசுகி மாணவர்களை கிரிமினல் என்று திட்டுவார்கள் இதனால் நாங்கள் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறோம் இந்த காரணத்தால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்துகொள்கிறோம் எங்களை கல்லூரி நிர்வாகி வாசுகி நடத்தை சரியற்றவர் என்று கூறுவார்கள் தயவுசெய்து இதை யாரும் நம்பவேண்டாம்/பிள்ளைகளால் பெருமைப்பட கல்லூரிக்கு அனுப்பும் அன்றாடங்காட்சி பெற்றோர்களை கஷ்டப்படுத்தி அந்த பெண்களின் குணத்திற்கு அவபெயர் உண்டாக்கி குருப்பீட ஸ்தானத்தை கூறுபோடும் இது போன்ற நிர்வாகிகள் தேவையா இந்த நாட்டுக்கு...இரண்டு வருடம் முடிக்கவில்லை கட்டணம் ஆறு லட்சம் வசூலித்துள்ளனர்/கக்கூசுக்கு கூட தகுதியில்லாத கல்லூரிக்கு கட்டணம் ஒரு கேடா இல்லை ஒவ்வொரு ஆறு லட்சத்திற்கும் முன் கூட்டியே ஜாமின் எடுத்து வைக்கப்படுகிறதா...இந்த கல்லூரியின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்/மனிதாபிமானத்தின் அடிப்படையில் யோசித்து கல்லூரியை அடைப்பதற்கு முன் இவர்களின் (கல்லூரி,காவல்துறை,ஊடகத்தால் தற்கொலையாக கருதப்படும்)மர்ம மரணத்திற்கு காரணமான நிர்வாகிகளை தூக்கிலிட்டு மண்ணில் அடைப்பீர்களா...ஒவ்வொரு பயங்கர நிகழ்வுகளையும் மறக்கடிக்கச் செய்ய இன்னொரு பயங்கர நிகழ்வோ(டெல்லி கற்பழிப்பு) பொழுதுபோக்கு நிகழ்வோ(திரைப்பட விழா) தான் காரணமாக அமைகிறது...இந்த பயங்கரத்தின் முடிவும் அப்படி ஒன்றாகத் தான் இருக்குமோ என்று பெரும் கலக்கத்தை ஏற்படுத்திகிறது இதயத்தில்...இன்று இதற்கு போர்கொடி ஏந்தும் நம்மையும் கூட வரும் நாட்களில் ஏதோ ஒரு சாதாரண நிகழ்வுகளை காரணம் காட்டி இதை மறக்கடிக்க செய்வர் நாமும் மறந்துவிடுமோ என்று ஒரு சந்தேகம் மேலோங்கி நிற்கிறது...இதை படிக்கும் ஒவ்வொரு உணர்வு மிக்க மனிதரும் தங்களின் பெரும் பங்காக நினைத்து இதற்கான குறைகளை cmcell.tn.gov.in என்ற முதல்வர் இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக கொள்கிறோம்...குறை சாடினால் நிறை நிறைவேற்றப்படுமா என்று அலட்சியப்படுத்த வேண்டாம்ஒருவரின் குறை சாடல் அவருக்கு அலட்சியமாக இருக்கலாம் ஆனால் ஆயிரம் பத்தாயிரம் லட்சம் நபர்களின் குறை சாடல் அவர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்...
முடிந்தவரை அனைத்து ஊடகங்களிலும் பகிருங்கள்
எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு எதையாவது செய்வது சிறந்ததே

Reply · Report Post