மனிதனின் வரம் - என்னுடைய முதல் சிறுகதை


விடியற்காலை நேரம் சேவல் கூவ குருவி பாட வாய்ப்பில்லா நகரத்தில் வாகன சத்தமில்லாமல் நிசப்தமான தருணத்தில் குழந்தையில் அழுகுரல் மட்டும் அந்த தெருவை ஆக்கிரமிப்பு செய்தது.அழுகுரல் டெய்லி நடக்கும் செயல் போல் அமைதியாக உறங்கி கொண்டிருந்தது மற்ற வீடுகள்.இன்று குழந்தையின் அழுகை ஏதோ செய்தது கேசவன் மனதில்...
மீனாட்சி மீனாட்சி என்று எழுப்பினார்
என்னங்க? என்றாள் மீனாட்சி
எதிர் வீட்டு குழந்தை ரொம்ப அழுவுறான் என்னனு தெரியலடி?
வாடிக்கையா நடக்கிறது தானுங்க பேசாம தூங்குங்க
அழு குரல் விண்ணை தொட்டு மீண்டும் விம்ப தொடங்கியது.கேசவன் நிலை கொள்ளவில்லை.ஏதோ விபரிதம் என்பதை மட்டும் உணர தொடங்கினார்.
பால்கனி வந்து சிகரெட்டை பற்ற வைத்து யோசிக்க தொடங்கினார்.
கேசவன் கருவூலத்தில் க்ளர்க்காக பணிபுரிகிறார்.இரண்டு வருடத்திற்கு பிறகு ஒய்வை நோக்கி காத்து கொண்டிருக்கிறார்.சிக்கனமான மனிதர்.எது முக்கியான தேவையை கண்டிப்பாக செலவு செய்ய கூடிய மனிதர்.ஆடம்பரத்தை அறவே வெறுப்பவர்.அதற்கு அவர் வீடே சாட்சி.
ஆனால் இந்த சிக்கனம் மீனாட்சி கண்களுக்கு கஞ்சதனம் போல் காட்சியளிக்கும்.எப்போதும் யாரையாவது காட்டி அவர்கள் எப்படி இருக்காங்க பாருங்க சண்டை போடுவாள்.இரண்டு வருடங்களாக எதிர் வீட்டில் வாழும் ராஜேஸ்- நேகா குடும்பத்தின் ஆடம்பார வாழ்க்கையை காரணம் காட்டி சண்டை போடுவாள்.சண்டை எல்லாம் சில மணி நேரங்கள் தான்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவள் ஜனனி கல்யாண பண்ணி வைத்து விட்டனர்.மூனு வருடமாகியும் குழந்தைபேறு இல்லை.இளைவன் வீரா வெளிநாட்டில் வேலை செய்கிறான்.<br>
எதிர் வீட்டிற்கு இரண்டு வருடத்திற்கு முன்பே குடி வந்தனர் ராஜேஸ்-நேகா காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாண செய்தனர்.இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ் நல்ல சம்பளம் ஆடம்பர வாழ்க்கையை வாழ தொடங்கினர். குழந்தை பிறக்கும் தருணத்தில் வேலையை விட்டாள் நேகா அதுவே பிரச்சனைக்கு பிள்ளையார் சூழி போட்டது.ஓருவரின் சம்பளத்தில் எல்லா கடனையும் அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆடம்பர வாழனும் என்ற எண்ணமே வெளியிலும் கடன் வாங்க தூண்டியது.குழந்தை பிறந்த இருந்து சண்டை தான்.வட்டிகாரன் வீட்டிற்கு தினமும் வலம் வர ஆரம்பித்தனர்.நேற்று சண்டை அதிகமாக இருந்ததால் தான் கேசவன் மனதை நச்சரித்தது.
இந்த நினைவுகளில் இருந்து எழுப்பியது காலி சிகரெட் பாக்கெட் தான்.
இன்னும் குழந்தையின் விம்பும் சத்தம் கேட்டு கேசவன் கதவை தட்ட தொடங்கினார்.திறக்கவில்லை&nbsp; அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ள பார்த்தால் நினைத்தது போல் நடந்து விட்டது.இருவரும் பிணமாக தூக்கில் தொங்கினர்.குழந்தை அழுது அழுது சோர்வாகி மயக்கம் போடும் நிலைக்கே வந்துவிட்டான்.அவனை தூக்கி அவனுக்கு பிஸ்கட் வென்னீரில் கரைத்து கொடுத்தார்.போலிஸ்க்கு தகவல் கொடுத்து பெற்றோர்களும் தகவல் கொடுக்கபட்டது.போஸ்ட்மார்ட்டம் பண்ண பிறகு தம் பிள்ளைகளை தன்னிடம் கொடுக்கும்படி கேட்டனர் பெற்றோர்கள்.போலிஸ் இங்கேயே ஈம சடங்கு முடிச்சிட்டு அந்த குழந்தைக்கு எதிர்காலம் முடிவு பண்ணிட்டு போங்க என்றனர்.ஈம சடங்கு முடிந்தது இரு பெற்றோர் வீட்டிலும் குழந்தையை பக்கத்தில் உள்ள காப்பத்தில் சேர்ப்போம் முடிவு எடுத்தனர்.இருக்கின்ற எல்லா பொருள்களையும் வாரி அணைத்தது வட்டிகாரர்கள் கைகள்.குழந்தையை காப்பக்கத்தில் சேர்த்து விட்டு சென்று விட்டனர்.
கேசவன் இந்த ஒரு வாரமாக சோகமாக இருந்தார்.
என்னங்க ஆச்சு உங்களுக்கு? என்றார் மீனாட்சி
அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு மீனாட்சி.&nbsp; எந்த தப்பையும் செஞ்சிட்டு ஈசியா செத்து போயிட்டாங்க இனிமேல் எல்லா தண்டணையும் அந்த குழந்தைக்கு.
விடுங்க எல்லாம் அந்த குழந்தை தலையெழுத்து என்றாள் மீனாட்சி
தலையெழுத்தை மாத்தலாம் மீனாட்சி
என்னங்க சொல்றிங்க?
இனிமே நம்ம பொண்ணு குழந்தை பேறு இல்லை டாக்டர் சொல்லிடாங்க.நம்ம பொண்ணுக்கு குழந்தை வேணும்.
என்னங்க சொல்றிங்க தெளிவா சொல்லுங்க?
நம்ம பொண்ணை அந்த குழந்தையை தத்தெடுக்க சொல்ல போறேன்.சமுகத்தில் ரெண்டு பேருடைய அவபெயரும் நீங்கும்.
நம்ம பொண்ணு ஒத்துகிடனுமேங்க?
நம்ம பொண்ணு வாழுறது நவின உலகம் ஈசியா ஏத்துபாங்க.நான் பொண்ணு-மாப்பிள்ளைகிட்ட பேசிட்டேன் சம்மதம் சொல்லிட்டாங்க.உன் விருப்பத்தை கேட்க சொன்னாள் உன் பொண்ணு.
என் பொண்ணு மலட்டி பட்டத்தை வாங்கி கூனி குறுகாம&nbsp; தலை நிமிர்த்து நடந்தா போதும்ங்க...

வாழ்க்கையில் மிக பெரிய சந்தோஷத்துடன் தலை நிமிர்ந்து நடந்தார் கேசவன்.........

Reply · Report Post