மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவுக்கு..


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவுக்கு ஒரு (மனம்) திறந்த கடிதம்..மடல்...கேள்வின்னு கூட சொல்லலாம் :

முதலில் உங்களின் பாதம் பணிந்து வணங்கி விடுகிறேன். ராஜகுலோத்துங்குவையோ, தங்கத்தாரகையையோ வெள்ளப்பித்தில் சொல்ல மறந்ததிருந்தால் இந்த பாவியை மன்னித்தருளுங்கள். உங்கள் ஆட்சியிந் மீது எனக்கிருக்கும் கடந்தகால பார்வை, விமர்சனம் அனைத்தையும் ஒரு ஓரமாய் வைத்து விட்டே இதை எழுதுகிறேன்.

செவ்வாய் காலை முதல் சைதை தொடங்கி ஓ.எம்.ஆர், ஈ.சீ.ஆர்,வேளச்சேரி, மடிப்பாக்கம், தரமணி பகுதிகளில் என் நண்பர்கள் ரூமில் தஞ்சம் புக அலைந்தேன். எல்லா இடங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தரமணி லின்க் ரோட்டில் அதிகாரிகள் போல இருந்தவர்கள் (நான் தே.பா.சக்கு பயந்தவன் தாயி) ரோட்டில் மழை நீரை எங்கிருந்தோ பம்ப் செய்து கொட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்கள் சென்னை முழுக்க திரிந்திருக்கிறேன். மெட்ரோ ரயில் Underwayயில் இருந்த நீரை மேலெடுத்து ரோட்டில் விடுகிறார்கள் என அசோக் நகரிலும், வீடுகளில் சிக்கயவர்களை காப்பாற்றாமல் மிக அதிகமான ஊழியர்கள் சும்மா பாலத்தில் நிற்பதாக சைதையிலும் சீறினார்கள்.

மெட்ராஸ்காரர்களின் சார்பாகவும் பஞ்சம் பிழைக்க சென்னை வந்தவர்களிந் சார்பாகவும் உங்களுக்கு சில கேள்விகள் :

1. போன மழை தண்ணீர் drainage systemத்தை collapse செய்தது தெரியுமா இல்லயா? அடுத்த மழை திங்களிரவு - செவ்வாய் பெய்யும் என அறிந்து நீங்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? போன மழையில் மவுண்ட் ரோடு ஸ்தம்பித்தது போல இப்போதும் ஏன் ஸ்தம்பித்தது?

2. மழை வரும் ரோடுகள், உட்கட்டமைப்பு சரியில்லை எனக்கூறிய விஜய் பின்னாலே ஐ.ஏ.எஸ் ஏன் மாற்றப்பட்டார்?

3. கடலூரில் நிவாரணப்பொருட்களை பிடுங்கி அதிமுககாரர்கள் உங்கள் படம் போட நிர்பந்திக்கிறார்கள் என செய்தி/வதந்தி/பச்சைப்பொய் உலவுகிறது. கலியுலக அவதாரமான தங்கள் செவிகளுக்கு எட்டாமல் தமிழகத்தில் ஏதும் யாரும் பேச மாட்டாது என அறிந்தாலும் நினைவூட்டுகிறேன்.

4. எல்லா அமைச்சர்களும் உங்கள் உத்தரவின் பெயரில் இயங்குகிறார்கள். கலேக்டர்கள் அதிகாரிகளும் உங்கள் பெயரை அதுவும் பட்டங்களோடு சொல்லி உத்தரவு படித்தே இயங்குகிறார்கள். தமிழகத்தில் எல்லாமே உங்கள் உத்தரவு எனில் இந்த அமைச்சர்கள் எல்லாம் மங்குனிகளா என உலகம் பேசக்கூடும் தெய்வத்தின் தெய்வமே. அருள் கூர்ந்து உத்தரவில்லாமல் எதையேனும் தானே செய்ய முடிந்த, செய்ய முற்படும் அமைச்சர்களை நியமித்தால் தங்களிடம் லட்சக்கணக்கில் இருக்கும் புண்ணியம் இன்னமும் சிறிது கூடும் தமிழகத்தாயே.

5. ஜெயா டீவியில் இயல்பு நிலை திரும்பியது என செய்தி போட்டு சிறிது நேரத்தில் டீவி கட்டிடம் பக்கம் வெள்ளம் வந்திருக்கிறது. பார்த்தீர்களா தமிழக மாதா, உண்மை உலகுக்கு உரக்க சொல்லக்கூட முடியவில்லை? இதெல்லாம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் வேலை என உள்மனம் சொல்கிறது.

6. அமைச்சர் விஸ்வநாதன் என்ன சொல்வதென தெரியாமல் கொஞ்சம் பேசும், அமைச்சர் வளர்மதி பேச்சை தவிர்க்கும் வீடியோ பார்த்தீர்களா அன்னையே?

7. 'நான் உத்தரவிட்டுள்ளேன்', 'தமிழ்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில்' ஆகிய சொற்தொடர்கள் தமிழக மக்களிடம் பெரும் வெறுப்பை பெற்றிருப்பதை அறிவீர்களா மஹா அன்னையே?

8. சித்தார்த், பாலாஜி, இன்னமும் எண்ணற்ற தன்னார்வ தொண்டர்கள் இல்லையெனில் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? இந்த நிலையில் நீங்கள் இவர்கட்கு ஓர் நன்றியோ/உதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்போ செய்யவில்லை. மக்களிடம் தொலைகாட்சி வாயிலாக ஓர் உரை கூட ஆற்றவில்லை. எங்கள் அன்னையை பார்க்கக்கூட கூடாத..எங்கள் அன்னை எங்களிடம் பேச மறுக்கும் வண்ணம் என்ன பிழை செய்தோம் அம்மா?

கவலையாய் இருக்கிறது தாயே. நீங்கள் செய்வீர்களா என போன தேர்தலின் போது கேட்ட கேள்வியை நினைவில் வைத்துச் செய்துவிடுவார்களென. நிர்வாகம் நிறைய கிழிக்காதது தண்ணீர் வடிவில் தெருவுக்கு வந்துவிட்டது. 2016இல் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுவோம் என உறுதியெடுப்போம் தாயே. வருந்தாதே தமிழகமே 2021 எங்களுடையதே.

Reply · Report Post