“கமல் அவர்கள் தனது குரு கே. பாலச்சந்தரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை.”

கமலின் படப்பிரச்சனைகளின்போது சரத் நீண்ட நேரம் பேசி பிரச்சனைகள் தீர்க்க உதவினாராம், கே. பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் நன்றி மறந்ததைப்போலவே சரத் செய்த உதவியையும் மறந்துவிட்டார் என்பது கமல் மீது சரத் அணியினர் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டுகள்.

கமல் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவித்துவிட்டுப் போகட்டும். அது அவரது உரிமை மற்றும் அனுபவம் சார்ந்த முடிவு. ஆனால் அதற்காக சரத் அணியினர் அவர் கே. பி யின் நன்றி மறந்ததாகச் சொல்வதில்தான் பெரும் உறுத்தல் எனக்கு.

தான் ஏறிய ஒவ்வொரு மேடையிலிருந்தும் அனந்து, ஆர். சி. சக்தி, கே.பி, சிவாஜி, நாகேஷ் பற்றியச் செய்திகளையோ, அவர்களின் திறமைகளையோ, செய்த உதவிகளையோ பேசாமல் இறங்கியதாய் என் நினைவில் இல்லை.

பலரும் வியக்கும் ஒரு நடிகன் தன் ஆசிரியர்களையும் நண்பர்களையும் ஒவ்வொரு மேடையிலும் புகழ வேண்டும் என்ற கட்டாயமா என்ன? ஏன் செய்தார்? இன்றிருக்கும் எந்த ஒரு கலைஞனுக்கும்/ நடிகனுக்கும் அவர்களின் எச்சம் நான் எனச் சொல்லிக்கொள்ளும் தைரியம் உண்டா? இதுதானே நன்றி கூறுதலாகும்!

டி. ஆர்ரெல்லாம் தன்னை அற்புதமான கலைஞன் என பீற்றிக்கொள்கிறாரே, அவரிடம் உங்கள் குரு யார் எனக் கேட்டால், நான் அனைத்தையும் தானாகக் கற்றுக்கொண்டவன் என்பார். சாத்தியமா என்ன? தன் குரு என யாரையாவது இதுவரை சொல்லியிருக்கிறாரா? இவரெல்லாம் குரு தர்மம் பேசுகிறார்.

தன் மகனுக்கு உதவியதற்காய் இன்னொரு நடிகனை பக்கம் பக்கமாய்ப் பேசி தகுதிக்கு மீறிப் புகழும் இவரைப் போன்றோரெல்லாம் கமலை விமர்சிக்கும் பேச்சுதான் எரிச்சலடையச் செய்கிறது.

கே.பி அவர்கள் வாழும் போதே அவருடன் பல விதமான கருத்து மோதல்கள் இருந்தாலும் எங்குமே கமல் அவரை விட்டுக்கொடுத்ததில்லை. (உத்தம வில்லன் படத்திலும் சேர்த்து). அவர் இறந்தபின் அவருக்கு மாலையணிவித்து, கைக்கூப்பி, மைக் முன் சோக முகத்துடன் தன் உரையை நிகழ்த்துவது மட்டுமே அஞ்சலி என நினைத்துக்கொண்டிருக்கும் இந்நடிகர்கள் கூட்டம், அதை மட்டுமே மனோரமாவிற்குச் செய்து பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மனோரமா இறப்பதற்கு முன் அவரைப் பற்றி எத்தனைப் பேர் பேசியிருப்பார்கள் அல்லது அவர் வீட்டுக்கு எத்தனைப் பேர் சென்று பார்த்திருப்பார்கள்? தேர்தல் ஸ்டண்ட்டுக்காக மட்டும்தானே சென்றார்கள்!

வாழும் போதே ஒருவரைப் புகழவும்/ உதவவும்/ நினைக்கவும் வக்கில்லாதவர்கள் அவர் இறந்தபின் வாய்க்கரியை பாசுமதியில் போட்டு என்ன பயன்?!

“போயி புள்ளக்குட்டிங்களையும் நடிக்க வையிங்கடா”
Reply · Report Post