புலி..!

சிம்புதேவனோட காமிக்கல் படம்.! (இப்படி சொல்லி எஸ்கேப் ஆகிடுவோம்). இந்த மாதிரி படத்துல ஏன் மாஸ் ஹீரோ விஜய் பண்ணனும்..என்கிற கேள்வியை சாய்ஸ்ல விட்டுட்டு படத்தை பாப்போம். புலி ஒரு அம்புலிமாமா கதையேதான்..பேசும் மாயப்பறவை, சித்திரகுள்ளர்கள், துப்புகளை** கண்டறிந்து (**காறிதுப்பல் அல்ல..எவிடன்ஸ்) வேதாள மாளிகையை அடைவது இப்படி படம் முழுக்க மாயஜாலம்தான். ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி மாதிரி எதிர்பார்த்து போகாம சும்மா ஒரு டைம்பாஸ்க்கு போய் உட்கார்ந்தா..புலி நல்ல படம் தான்.

சில பல பெல்லிடான்ஸ்கள் தவிற இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் தான். அதோட குழந்தை மனசு கொண்டவர்களூக்குமான படமும். மொத்த சமூகமும் வாஷ் பண்ணி புவர் பண்ற அளவுக்கு புலி மொக்கை படம் இல்லை. இங்க பிரச்னை ஒரு சாதாரண பொழுது போக்கு மூவிக்கு இவ்வளவு பில்டப் கொடுத்ததுதான். நம்ம பிரில்லியண்ட் மூளையை கொஞ்ச நேரம் கிழட்டி வைச்சுட்டு, குழந்தைகளா மாறி படம் பார்த்தா கட்டாயம் புலி பிடிக்கும். ஸோ.. புலி....ஒரு முறை தாரளமா குடும்பத்தோட குழந்தைகளோட போய் பார்த்து என்ஜாய் பண்ணலாம். வி லைக் புலி தென் சுரான்னு உரையை முடிச்சுக்குறேன்.

Reply · Report Post