என் வெப்சைட் மூலம் சாப்பிங் செய்பவர்களுக்கு...


முதல் டுலால சொல்லீருந்தேன், ஆனா பலபேருக்கு தெளிவா புரியல, பரவாயில்ல இத கொஞ்சம் டைம் எடுத்து ஒரு முறை படிச்சிடுங்க.

இன்னிக்கு ஆன்லைன் சாப்பிங் அதிகமா இருக்கு,எந்தப் பொருளையும் ஈசியா பாத்து அதப்பத்தி தெரிஞ்சு எங்க கிடைக்கிது,எதுல விலை கம்மியா இருக்குன்னு பாத்து வாங்குறோம்.flipkart, snapdeal, amazon போன்ற பல வெப்சைட்டுகள் இதுல முன்னனில இருக்காங்க,அவங்களுக்கு இடைல நடக்குற போட்டி தான் நமக்கு லாபம்.ஒருத்தர விட மத்தவங்க விலைய குறைவா போட்டு தன் பக்கம் இழுக்குறாங்க.பல ஆஃபர் போட்டு விலைய கம்மி பண்ணுறாங்க, அந்த விலைல நீங்க வாங்கிடுறீங்க.

என் வெப்சைட் மூலமும் அந்தப் பொருளை அதே விலை கொடுத்து தான் வாங்கப்போறிங்க, நீங்க வாங்கியதும் , வாங்கின விலைல பொருள், அதல் விலை பொருத்து குறிப்பிட்ட % உங்களுக்கு cash back காக கிடைக்கும்,இந்த cashback தொகை தானா உங்க அக்கவுண்ட்ல வராது, அந்த அளவுக்கு சைட்ட கொண்டு போகல.எப்படினு சொல்லிடுறேன், அதுக்கு முன்ன முக்கியமான ஒன்னு சொல்லியே ஆகணும்

இது பெரிய நிறுவனம் இல்ல,ஆட்கள சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சு பதில் சொல்லல, பல பேர் வரிசையா கேட்டுகிட்டே இருக்காங்க, நான் பதில் சொல்லிக்கிட்டே இருக்கேன்,நான் ஒரு ஆள் தான், அண்ணன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறார்,நான் முழு நேரமாகவும் இத பண்ணல, ஆஃபிஸ் போறேன், வீட்டு வேலைகள் இருக்கு, உங்கள மாதிரி ஒரு சராசரி வாழ்க்கை தான்.எனக்கு உன்ன ட்விட்டர்ல பிடிக்காது,அதனால சும்மா எதாச்சும் கேட்டுகிட்டு இருப்பேன்னு கேக்காதிங்க, நீங்க வீணாக்குற என் நேரத்துல யாரோ ஆன்லைன்ல பொருள் வாங்குபவரோட பணமும் கொஞ்சம் வீணாகுது,

அந்த ஐடில பிடிச்சவர் பிடிக்காதவர்னுலாம் யாரும் இல்ல, யாரும் ஃபாலோ பண்ணலாம், யாரையும் ஃபாலோ பேக் பண்ணுவேன், என்ன பிடிக்காதவங்க மென்சன் போட்டா பதில் சொல்ல மாட்டேன்னுலாம் இல்ல,ட்விட்டர் வாழ்க்கைல யாரு எப்படி இருந்தாலும் சொந்த வாழ்க்கைல பணத்துக்கு நாய்படாத பாடுதான் எல்லாரும் படுறோம்.அதனால என்னால முடிந்த அளவு எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுறேன்.

இதுல உனக்கும் தான லாபம் இருக்கு,அப்பறம் எப்படி ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுறன்னு கேக்கலாம், என் லாபத்த தான் கேஸ்பேக்கா கொடுக்குறேன்,ஒரு குறிப்பிட்ட தொகை நான் எடுக்கத்தான் செய்யிறேன், இந்த வெப்சைட்டுக்கு நான் 20000 செலவு பண்ணீருக்கேன். நேரத்தையும் உழைப்பையும் 100% உங்களுக்காக மட்டும் பண்ணிட முடியாது.சின்ன விலைக்கு லாபம் எல்லாம் பாக்குறதில்ல,புத்தகங்களுக்கு கிடைக்கிற தொகைய அப்படியே கொடுக்குறேன், மற்ற பொருட்கள்ள பெரிய தொகையா இருந்தா 20% வரை எடுக்குறேன்,

ஆன்லைன்ல பொருள் வாங்குறதுல எப்படி மிச்சப்படுத்துறதுன்னு ஒரு வழிதேடி,அதுல உங்களையும் சேத்துக்கிட்டேன் அவ்ளோதான். சரி சொல்ல வந்த விசயத்துக்கு வரேன்

ஆன்லைன் சாப்பிங் பொதுவா எல்லாருக்கும் தெரியும், நீங்க என்ன பொருள் வாங்குறதுன்னு முதல்ல முடிவு பண்ணீடுங்க, சாப்பிங் வெப்சைட்ல தேடுங்க, பொருள முடிவு பண்ணிட்டு என் வெப்சைட் வாங்க, மெயில் ஐடி போட்டு ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கிறது நல்லது,இல்லைனா பரவாயில்ல, கீழ continue without login இருக்கு,அதுல எந்த சைட் வேணுமோ அத செலக்ட் பண்ணிக்கலாம்.

லாகின் பண்ணி யூஸ் பண்ணுறவங்க, லாகின் பண்ணினதும் Home page ல பாப்புலர் வெப்சைட்ஸ் ( flipkart , amazon, snapdeal) இருக்கும், மத்த சைட்டா இருந்தா all sites ஆப்சன்ல போகலாம், Amazon ல வாங்கணும்னா அத க்ளிக் பண்ணினதும் new tab ல Amazon ஓப்பன் ஆகும், அதுல போய் என்ன பொருள் வேணுமோ அத தேடி வாங்கிக்கலாம். எல்லா வெப்சைட்டுக்கும் இதே ப்ரொசிஜர் தான், நீங்க ஆடர் பண்ணினதும் என் @get_bestprice ஐடிக்கு ஒரு மெசேஜ் அனுபிடுங்க, ஏன்னா என்ன பொருள் வாங்கிருக்காங்கன்னு மட்டுமே எனக்கு தெரியும் யாரு வாங்கினான்னு தெரியாது, நீங்க மெசேஜ்ல சொல்லிட்டா உங்களுக்கான கேஸ்பேக்க கொடுக்க வசதியா இருக்கும்.தொகைய தற்காலிகமா உங்க அக்கவுண்ட்ல (என் வெப்சைட் அக்கவுண்ட்) wallet ல போட்டு வச்சிடுவேன் (My account -- Account information ல அத பாக்கலாம், மெயில் ஐடி போட்டு ரெஜிஸ்டர் பண்ணீருந்தா மட்டும்) பொருள் டெலிவரி ஆனதும் ஒகேனா எனக்கு மெசேஜ் பண்ணுங்க, அந்த wallet ல இருக்குற தொகைய உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி கொடுத்திடுவேன்

cashback தொகைய , mobile topup ,paytm wallet, bank transfer , Flipkart/Amazon gift coupons இந்த முறைல வாங்கிக்கலாம்

என் வெப்சைட்ல போய் ஆஃபர்லாம் தேடாதிங்க, நீங்க நேரடியா வாங்குறதுக்கு பதிலா என் சைட் மூலம் வாங்குறீங்க அவ்ளோதான்.நீங்க வாங்குறதுல சந்தேகம் இருந்தா என்கிட்ட கேளுங்க,புதுசா ஆன்லைன் சாப்பிங் பண்ணுறவங்களுக்கு தான் தெரியாது, பெரும்பாலும் ஆன்லைன் சாப்பிங் அதிகமா பண்ணுறவங்க தான்.

1% - 10% வரை cashback கொடுக்குறேன், இதுவரை 1500 ரூபாய் வரை கேஸ்பேக் வாங்கிருக்காங்க. பணத்த மிச்சப்படுத்த இது ஒரு வழி

(flipkart ல வாங்குறதா இருந்தா எனக்கு ப்ராடக்ட மென்சன் பண்ணுங்க, நான் கொடுக்குற லிங்க் மூலம் mobile app ல வாங்குறது பெஸ்ட்)

நன்றி :-))








Reply · Report Post