‪#‎rknagar‬ கள்ள ஓட்டால் இமாலய வெற்றி" - நக்கீரன்

இந்த இடைத் தேர்தல் எவ்வாறு நடந்தது என்பதற்கு; இந்த இதழ் "ஜுனியர் விகடன்" சிறந்த உதாரணம் ஒன்றைக் கூறியிருக்கிறது. ஆர்.கே. நகர் தொகுதியில் 181வது வாக்குச் சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்கள் பட்டியலை விட, கூடுதல் வாக்குகள் பதிவாகியிருப்பது ஒன்றிலேயிருந்தே, அந்தத் தொகுதியில் எவ்வாறு எல்லா வாக்குச் சாவடிகளிலும் கள்ள வாக்குகள் சரமாரியாகப் பதிவாகி இருக்கின்றன என்ற உண்மை ஊருக்கே தெரிந்து விட்டதே? அந்தத் தொகுதியிலே கள்ள வாக்குகள் போடப்பட்டிருக்கின்றன என்பதற்கு இதைவிட ஆதாரப் பூர்வமான சான்று வேறென்ன வேண்டும்?
வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரும் - சைதாப்பேட்டை அதிமுக கவுன்சிலர் ஒருவரும் - திருவொற்றியூர் அதிமுக கவுன்சிலர் ஒருவரும் - சேத்துப்பட்டு கவுன்சிலர் ஒருவரும் - சேப்பாக்கம் பகுதி அதிமுக மகளிரணியைச் சேர்ந்த ஒருவரும் - மற்றும் இது போல் அந்தத் தொகுதியைச் சேராத அ.தி.மு.க. வினர் பலரும், இந்த இடைத் தேர்தலில் கள்ள வாக்கு அளித்து விட்டு வருவதை புகைப்படத்தோடு "நக்கீரன்" இதழ் இந்த வாரம் எடுத்து வெளியிட்டு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

வாக்குச்சாவடி அதிகாரிகளாக இருந்த அரசு அலுவலர்கள் அனைவரும் அ.தி.மு.க. வின் பொறுப்பாளர்கள் சொல்வது போல செயல்பட வேண்டுமென்று உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டார்களாம்.அந்த "நக்கீரன்" இதழ் "கள்ள ஓட்டால் இமாலய வெற்றி" என்ற தலைப்புடன் நீண்ட கட்டுரையே அந்தத் தொகுதியில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன என்பதை விரிவாக எழுதியுள்ளது. ஜுனியர் விகடனோ, "ஆர். கே. நகர் - மதியத்துக்குப் பிறகு கள்ள மேளா" என்ற தலைப்பிலே எழுதியுள்ளது. இதையெல்லாம் தமிழ் நாளேடுகள் சிலவற்றைப் போல் மறைத்து விட்டுத் தான் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியிலே வெற்றி பெற்றிருக்கிறார். இதற்குப் பெயர் தான் அ.தி.மு.க. அகராதியில் "இமாலய வெற்றி" போலும்!

உண்மையிலேயே இப்படிப்பட்ட வெற்றியின் குணாதிசயங்களை நினைத்துத் தான் ஜெயலலிதா நேற்றையதினமே எம்.எல்.ஏ.வாக பதவியேற்கப் போகிறார் என்று மாலை ஏடுகளில் செய்தி வந்த போதிலும், பதவி ஏற்கவில்லையோ என்னவோ? இப்படியெல்லாம் அட்டூழியங்கள் நடக்குமென்று முன் கூட்டியே எதிபார்த்துத் தான் பிரதான எதிர்க் கட்சிகள் அங்கே போட்டியிடவே முன் வரவில்லை. ஆனால் இந்த வெற்றி, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஜெயலலிதா தனது நன்றி அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது எரிச்சலும் சிரிப்பும் தான் மாறி மாறி வருகிறது! ‪#‎Kalaignar‬ ‪#‎Karunanidhi‬ ‪#‎DMK‬ #rknagar ‪#‎jayalaithaa‬ ‪#‎admk‬ #DMK ‪#‎election2016‬

Reply · Report Post