ட்விட்டர்ல இருக்க நெறையா பேருக்கு ஆனந்தவிகடன்ல வலைபாயுறதோ...இல்ல ட்விட்டர் கலாட்டா, வலைப்பேச்சு...இந்தமாதிரி இடங்கள்ள அவங்க ட்வீட் வரணும்னு ஆசையா இருக்கும்...(எனக்கும் ஒருகாலத்துல இருந்திச்சு)

அவங்களுக்காகத்தான் இந்த பதிவு..

ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம், நா ட்விட்டர் வர்ரதே ச்சும்மா டைம்பாஸுக்குத்தான் அப்டின்னு நெனைக்குறவங்க..அப்டியே அபவுட் டர்ன் பண்ணி...டைம்லைன்ல போயி, கருத்தோ கடலையோ போடுங்க!

ஒரு மீடியால உங்க ட்வீட்டும் வரணும்னா..டாபிக் அந்தளவுக்கு வொர்த்தா இருக்கணும்..

இப்பெல்லாம்....அம்மா செண்டிமெண்ட், பிச்சைக்காரன் ட்வீட், அனாதை ஆசிரமம் ட்வீட் எல்லாம் வலைபாயுறது இல்ல. So Dont crush your brain in these subjects..

வாழ்க்கை பத்தின ட்வீட், (e.g) "வாழ்க்கை நம்மளத்தான் தூக்கிப்போட்டு அடிக்குதுன்னு நண்பனப் பார்க்கலாம்னு போனா...அவன படுக்கவெச்சி வாயிலேயே குத்திகிட்டு இருக்கு"....like this....

அதுபோக, current hot news என்னவோ, அத ஃபோகஸ் பண்ணி ட்வீட்டலாம்.. (e.g) தோணிக்காக தீக்குளிப்பேன் அப்டின்னு அஸ்வின் சொன்னதுக்கு comment: மொதல்ல மேலுக்கு குளிங்கடா...அப்புறம் தீக்குளிக்கலாம்..like this..

அப்புறம்...சந்துல எதாச்சும் interesting tag ஓடிச்சின்னா, அதுல உங்க ட்வீட்ஸ பதிவு பண்ணுங்க...Topic நல்லாருக்கும்போது அதுல இருந்தும் எடுத்துக்குவாங்க!..

இதுமாதிரியெல்லாம் ட்ரை பண்ணுங்க..

அப்புறம், RT நெறையா வரணும்னு ஆசைப்படுறவங்க...தயங்காம மீள் போடுங்க..கேலி பண்றவங்களப் பத்தி யோசிக்காதீங்க!

பாலோயர்ஸ் அதிகமா இருக்கவங்கள்ட்ட லின்க் குடுத்து RT பண்ண சொல்லலாம்...மீடியால இந்த மாதிரி டார்ச்சர்கள் எதுவும் தப்பில்ல!!

ஈவ்னிங் டைம்ல போடுற ட்வீட்கள் அதிகம்பேரால பார்க்கப்படுதுன்னு நெனைக்குறேன்...so நல்ல ட்வீட் தோணுனா, Draft ல வெச்சிருந்து...டைம்லைன்ல அதிகமான பேர் ஆன்லைன்ல இருக்கும்போது தட்டி உடுங்க!

உங்களோட நல்ல ட்வீட்ஸ்கள நீங்களே fav பண்ணி வெச்சிருந்தா...தேவையான நேரத்துல மீள் போடுறதுக்கு ஈசியா இருக்கும்..மீள்ன்னா அந்த ட்வீட்டோட தொடர்ச்சியா எதாவது ட்வீட் போட்ட...முந்தின ட்வீட்டும் சேர்ந்து டைம்லைன்ல தெரியும்..

மத்தவங்க ட்வீட்ஸ பேவ் பண்ணாத்தான் கடுப்பாவாங்க..நீங்க உங்க ட்வீட்ஸ பேவரிட பண்ணுறது தப்பேயில்ல..

இதையெல்லாம் விட, நாட்டுப்புறத்தார், ட்விட்டர் எம்ஜிஆர் இவங்க RT பண்ணா...உங்க ட்வீட்ஸ் மீடியா கவனத்துக்கு வர வாய்ப்பு அதிகமா இருக்கும்!! so நீங்க அவங்கள யூஸ் பண்ணிக்கலாம்..

பி.கு: எனக்கு இந்த RT, வலைபாயுதேவுல எல்லாம் பெருசா interest கெடையாது...அந்தளவுக்கு யோசிக்கவும் தெரியாது 😂😂😂
கலாய்க்கத்தான் தெரியும்!! கலாய்க்க மட்டுந்தான் தெரியும்!!

முடிவுரை!!

இதையெல்லாம் என்னோட கணிப்புல சொன்னது...இதெல்லாம் பண்ணியும் ரீச் ஆவலன்னு சொன்னா....கம்பெனி பொறுப்பாகாது!!
So Guys....


Keep trying...keep on trying...
All the very best..👍👍👍

-பச்சப்புள்ள

Reply · Report Post