ராஜா பாடல்கள் கார்ப்பரேட், காப்பிரைட் & கார்க்கிரைட்டன் உளறல்ஸ்


இன்றுமுதல் எல்லா FMஇலும் ராஜா பாடல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. ராஜா பெயர் இல்லாமல் நடந்த RadioCity 90days of Raja Only Songs நிகழ்ச்சி உள்பட.

நேற்றிரவு வரை ராஜா பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டுதான் இருந்தார்கள், நான் கடந்த சில நாட்களாக 91.1 RadioCity "90days of Raja Only Songs" கேட்டுக்கொண்டிருந்தேன். அவ்வப்போது FM கேட்பவன் என்கிற முறையில், வழக்கமான ராஜா பாடல்கள் தாண்டி சில அரிய பாடல்களும் 91.1 இல் மட்டும் ஒலிபரப்பானது கேட்டு சந்தோஷமாக தினமும் கேட்க ஆரம்பித்தேன். பின்பு தான் தெரிந்தது, வழக்கமாக எக்கோ அகி போன்றவர்களிடம் உள்ள 300 சொச்ச பாடல்கள் தாண்டி 600 பாடல்களை RadioCity ஒலிபரப்பினது தெரிந்துகொண்டேன். சுட்டி - http://www.thehindu.com/features/cinema/salute-to-ilaiyaraaja/article7188356.ece

காப்பிரைட் பிரச்சனை முடிந்துதான் இந்த அதிக / புதிய பாடல் ஒலிபரப்பு என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது பிரச்சனை முடிந்தபாடில்லை என.

அதிஷாவின் கட்டுரை http://www.athishaonline.com/2015/05/brand.html முழுக்க சரி.

எனக்கு, ஒவ்வொரு முறையும் ராஜா தரப்பிலிருந்து இந்த காப்பிரைட் பிரச்சனை குறித்து செய்தி, வீடியோ வரும்போது, பிரச்சனை ராஜாவுக்கும் கார்ப்பரேட்களுக்கும். எதற்கு ப்ரஸ்மீட், செய்தி எல்லாம்? சுமூகமாக அவர்களையே தொடர்புகொண்டு மூஞ்ச சிரிச்சாப்லயே வெச்சிகிட்டு ஆனா கராரா, இனி அனுமதி வாங்காம என் பாட்டை நீங்க போட்டா அது சட்டப்படி குற்றம்" ன்னு சொல்லிட்டா போதாது? ஏன் பப்ளிக்கிற்கு வரணும்னு தோணும்.

காப்பிரைட் பிரச்சனை என்பது புதிதல்ல. உலகம் முழுக்க எல்லா பெரிய, சிறிய கலைஞர்களும் சந்தித்த சந்திக்கும் இனியும் சந்திக்கப்போகும் விஷயம் தான். (படிக்க - இரா.தீபக் @rdeepakk எழுதிய "பாப் மார்லியும் காப்பிரைட்டும்" http://www.twitlonger.com/show/n_1smc5vb) அதில், ராஜாவுக்கு வந்திருக்கும் பிரச்சனையும் எந்த வகையிலும் ஒரு புதிய வகை பிரச்சனை அல்ல. இதற்கு தீர்வும் சிம்பிள். இதுவரை ராஜா உள்பட எந்த எம்டியின் பாடல்களையும் ஒலி/ஒளிபரப்பும் பயன்படுத்தும் எல்லா கம்பெனிகளும் பணம் கட்டி தான் பரப்பிக்கொண்டிருக்கின்றன. எந்த ஒலி/ஒளிபரப்பு நிருவனமும் காசு கட்டாமல் பரப்புவதில்லை.

ராஜா விஷயத்தில், தப்பான இடத்தில் அந்த உரிமப்பணத்தை கட்டிக்கொண்டிருக்கிறீர்கள், அங்கு கொடுப்பதற்கு பதிலாக என்னிடம்/தயாரிப்பாளர் சங்கத்திடம் தான் நீங்கள் கொடுக்கவேண்டும் என்பது தான் ராஜா சட்டப்படி சொல்ல வரும் விஷயம்.

ராஜா, சில மாதம் முன்பு கோர்ட்டில், நியாயமாக தனக்கு வரவேண்டிய சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டார். இப்போது அதை நடைமுறைப்படுத்துகிறார். இதை under the wraps செய்யாமல் ஏன் அறிக்கை வெளியிடுகிறார் என தோன்றியது. ஏனென்றால், இந்த அறிக்கை/வீடியோவை வைத்து தான் தமிழ் பண்டார கூட்டம் கேலிகளை துவங்கியது. ரசனை கருமம் கூட மீம் போட்டது இந்த விஷயத்தில் தான்.

ஆனால், இப்படி பொது அறிவிப்பு செய்வதும் கூட ஒரு உலக வழக்கம் தான் என்பது பின்பு புரிந்தது. ஆக,

1) ராஜா சட்டப்படி வழக்கு போட்டது வென்றது நடைமுறைப்படுத்த முயல்வது அறிக்கை விடுவது அனைத்துமே வழக்கமாக கலைஞர்கள் செய்வது தான். இந்த அறிக்கையே ஒலி/ஒளி பரப்பு நிறுவனங்கள், ராஜா இசை உரிமையை காலம் கடந்தும் அனுமதி மீறியும் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யும் ஆடியோ நிறுவனங்களுக்கு மட்டும்தான். இதில் பொது மக்களுக்கும் ரசிகனுக்கும் எந்த வேலையும் இல்லை. மற்ற நிறுவனங்களும் இனி புதிதாக பாடல்களை பயன்படுத்த வருபவர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்ற நோக்கில் மட்டுமே இவை பொது ஊடகங்களில் அறிக்கையாக விடப்படுகின்றன.

2) இதில் ராஜா தரப்பில் தவறு இருப்பதாக இருந்தால், சம்மந்தப்பட்ட ஒலி/ஒளி பரப்பு நிறுவனங்கள், ஆடியோ நிறுவனங்கள் பார்த்துக்கொள்வார்கள் / கொள்ளவேண்டும். இதிலும் சராசரி ரசிகனுக்கு எந்த Role உம் இல்லை

இதற்குமேலும், இதில் ராஜாவை குற்றம் குறை சொல்பவன் மூடன் மட்டுமெ. அவனுக்கு உரிமை இல்லாத ஒரு விஷயத்தில் சொல்லும் வீண் கருத்து தான் அது.

இதெல்லாம் போக, ராஜாவின் பாடல்களனைத்தும் காசு கொடுத்து வாங்க நினைத்தாலுமே கூட, கிடைப்பதில்லை. இது, நிச்சயம் ராஜா Address செய்தாக வேண்டிய பிரச்சனை தான். யூட்யூபில் RajsMed போன்ற சில சேனல்களில் பெரும்பாலான பாடல்கள் கிடைக்கின்றன. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. Raaga.com இல் இருக்கும் 2000_ ராஜா பாடல்கள், உரிமம் பெற்றவையே. இன்றுவரை தூக்கப்படவில்லை. ஆனால் Saavn.com அகியிடம் உரிமம் பெற்றதால் முழுதாக ராஜா பாடல்கள் தூக்கப்பட்டுவிட்டன. ஆனால் Rare Songs கிடைப்பது அதுவும் MP3 ஆக இல்லாமல் Audio CD / LP Record தரத்தில் கிடைப்பது மிக கடினமாக இருக்கிறது, இதை ராஜா ஏன் இன்னும் ஒழுங்கு செய்யாமல் இருக்கிறார் என சிலபல மாஃபியாக்கள் கேட்பதுண்டு. ஆனால் இது கூட, மாஃபியாக்களுக்கு மட்டுமான பிரச்சனை தானே?! அவரின் பல பாடல்களையே கேட்காத அல்லது அதற்கு முயலாத, ராஜா இசையில் ஆழ்ந்த ஆர்வம் இல்லாத வெட்டி வெண்ணைகள் எல்லாம், நீ காசு கொடுத்து தான் பாட்டு வாங்குறியா என்றெல்லாம் கேட்பது எந்த அடிப்படையில்/உரிமையில்?

-------------------------------

FM இல் ராஜா பாடல்கள் நிறுத்தப்பட்டுவிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான். வியாபார ரீதியாக பரப்பு நிறுவனங்களுக்கும் நஷ்டம் தான். ஆனால், இதுவரை, பரப்புவதையும் நிறுத்தாமல், தவறான ஆடியோ நிறுவனங்களுக்கு உரிமப்பணத்தையும் வழங்கிக்கொண்டு இருந்த பரப்பு நிறுவனங்கள், இப்போது, பாடல் பரப்புவதை நிறுத்தவாவது செய்தது, ஒரு படி முன்னேற்றம் தான்! சீக்கிரம் இந்த நிறுவனங்கள், முறையான அதிகாரம் கொண்ட ராஜாவிடமும் தயாரிப்பாளர்களிடமும் மட்டுமே அதே உரிமப்பணத்தை செலுத்தி பாடல் ஒலிபரப்பை தொடர்வார்கள் என நம்புகிறேன், காத்திருக்கிறேன்! அப்படியே, இதுவரை 300+ ராஜா பாடல்களில் மட்டுமே குதிரை ஓட்டிக்கொண்டிருந்தது போலின்றி, மொத்த 3000+ தமிழ்ப்பாடல்களையுமே உரிமம் பெற்று ஒலிபரப்பவேண்டும் என்றும் விரும்புகின்றேன்!

Reply · Report Post