ஒகே கண்மனி பாத்துட்டு திரும்பி வரப்ப நடந்த சம்பவம்..


ஒகே கண்மனி பாத்துட்டு திரும்பி வரப்ப நடந்த சம்பவம்:

நான்: படத்துல மணிரத்னம் என்ன சொல்ல வறார்.
வீட்டம்மா: இப்போ நீ என்ன சொல்ல வற்ற..

நான்: நான் ஒன்னும் சொல்லலை…சும்மாதான்…….
வீட்டம்மா: அவர் தெளிவாதான் சொல்லிருக்கார்

நான்: அதான் என்னான்னு கேட்டேன்..
வீட்டம்மா: இதுக்கு மேல என்ன சொல்லனும்..

நான்: கொஞ்சம் அலைபாயுதே மாதிரி இருக்குல்ல
வீட்டம்மா: நீ மட்டும் திருந்திருக்கியா…

நான்: கொஞ்சம் பாம்பே மாதிரியும்..
வீட்டம்மா: லூசு மாதிரி ஒளறாதே..அது இந்து முஸ்லிம் படம்..

நான்: வீட்டை விட்டு கூட ஒடுவாங்களே
வீட்டம்மா: இது லிவிங் டு கெதர்..ரன்னிங் டு கெதர் இல்லை..

நான்: சர்தான்..(நமக்கு வாய்ல வாஸ்து சரியில்ல போல..மைண்ட் வாய்ஸ்)

வீட்டம்மா: துல்கர் கண்ணுக்குள்ளயே நிக்கிறான்ல..
நான்: ஆமா. நித்யாமேனன் கூட நெஞ்சுக்குள்ளயே நிக்குறா..

வீட்டம்மா: க்க்கும்..துல்கரை பாத்து திருந்து..
நான்: நீ கூட நித்யாமேனன் மாதிரி, படிச்சுட்டு வேலைக்கு போலாம்ல..

வீட்டம்மா: நோ , நான் ஹவுஸ் ஒய்ஃப்..
நான்: மேய்க்குறது எருமை..அதுல என்ன அவ்வளவு பெருமை

வீட்டம்மா: ரொமான்ஸ்னே என்னான்னு தெரியாத நீ ஒரு ஞானசூன்யம்

நான்: இப்போ என்னா ரொமான்ஸ்தானே..வீட்ல போய் பண்ணீட்டா போச்சு
வீட்டம்மா: அதுல்லாம் வேணாம். பாத்திரம் நிறைய கிடக்கு. அதை மட்டும் கழுவி கொடு

நான்: அடி பாதகத்தி….. இதுக்குதான் ஈரோடு சுத்தி திருச்சி வற்றியா…ம்ம்..
வீட்டம்மா: க்ளைமாஸ்ல செம ட்விட்ஸ்ட் இல்ல?

நான்: ட்விட்ஸ்டா…அது எங்க இருந்துச்சு..
வீட்டம்மா: ட்விட்ஸ்டே இல்லைல..அதான் செம ட்விட்ஸ்ட்

நான்: நான் இப்பொ ஃபேஸ்புக்ல போய் என்ன சொல்றது. படம் நல்லா இருக்குன்னா?
வீட்டம்மா: அதுல்லாம் நான் பாத்துக்குறேன். நீ லைக் மட்டும் போட்டா போதும்.

நான்: சரி உனக்கு வாக்கபட்ட பாவத்துக்கு போட்டு தொலைக்கிறேன்..

#வாயை கட்டி வயிறு வளர்ப்போம் - சங்க சார்பாக கட்டழகு கட்டதொர..

Reply · Report Post