mythili_br

M · @mythili_br

16th Apr 2015 from TwitLonger

சண்டை போடறவங்களே.. வேடிக்கை பாக்கிறவங்களே..


நானும் சந்துல அக்கவுண்ட் ஆரம்பிச்சதுல இருந்து பாக்கிறேன். எப்ப பாத்தாலும் சண்டை சச்சரவு அடிதடி. உங்க எல்லாத்துக்குமே நான் சொல்லிக்கிறது ஒண்ணே ஒண்ணுதான். நீங்க ஏனோதானோன்னு சண்டை போடுறதுல எங்கள மாதிரி சுத்தியிருக்கிறவங்களுக்கு என்னென்ன பிரச்சனை வருதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இல்லையா??? அப்ப இந்த டுலாவ படிச்சிட்டு தயவுசெஞ்சு எங்களோட பிரச்சனைய புரிஞ்சிகிட்டு கொஞ்சம் உங்கள திருத்திக்கங்க...

1. சண்டை போடுங்க வேண்டாம்ன்னு சொல்லல. ஆனா அதை சாயந்திர நேரமா பாத்து போடுங்கன்னுதான் சொல்றோம். வேலை செய்ற நேரத்தில போட்டா எங்களால முழுசா பாலோஅப் பண்ண முடியல. பாலோஅப் பண்ண முடியாதனால சுத்தமா வேலையும் செய்ய முடியறதில்ல :-//

2. அதேமாதிரி சண்டை போட்டவங்க, அந்த கான்வோ லிங்க அவங்கவங்க ப்ரொபைல் பேஜ்ல, ஒரு ரெண்டு நாளைக்கு பின் பண்ணி வைங்க. ஏன்னா கெடைக்கிற கொஞ்ச நேரத்துல, ஒரு சண்டைய தேடித்தேடி படிக்கிறதுக்குள்ள இன்னொரு சண்டை நடந்து முடிஞ்சிடுது. நாங்களும் மனுஷங்க தானே.

3. அப்புறம், உங்க இஷ்டத்துக்கு சுருக்கெழுத்து வேற யூஸ் பண்றீங்க. மா.கா.பா போ.கா.பா ன்னுட்டு.. வயிறு நெறையா சாப்பிட்டுட்டு சுவீட் மட்டும் இல்லனா அந்த விருந்தோட மொத்த சுவையும் வடிஞ்சி போயிடுதில்லையா. அப்படித்தானே இதுவும். எங்க மனக் குமறலையும் கொஞ்சம் புரிஞ்சிகிங்க.

4. முக்கியமா, சண்டை ஆரம்பத்துலையே எந்தெந்த ஹேண்டிலுக்கு என்னென்ன புனைப்பெயர்னு குறிப்பு போட்டுட்டு அப்புறமா புனைப்பெயர சொல்லி திட்டுங்க. படிச்சிகிட்டேஇருக்கும்போது திடீர்னு யார சொல்றீங்கன்னு தெரியாம போய்டுது. ஒடனே, அது யாருன்னு நாலு பேர்கிட்ட விசாரிச்சுட்டு வரதுக்குள்ள இங்க சண்டைய முடிச்சி, கான்வோல முக்கியமான ட்வீட்டயெல்லாம் வேற டெலீட் பண்ணிடறீங்க.

5. அடுத்து, அதென்ன டெலீட் பண்ணி உட்டர்றது ? இந்த பழக்கத்தையெல்லாம் எங்க கத்துக்கிறீங்க???

6. அதை விட மோசமா, சண்டை முடிஞ்சதும் உங்க பாட்டுக்கு அக்கவுன்ட்டுக்கு பூட்டு போட்டுக்கிறீங்க, ஹேண்டில் மாத்திடறீங்க இல்லன்னா டீஆக்டிவேட் பண்ணி வச்சிடறீங்க. நாங்க அலைஞ்சி திரிஞ்சி காத்திருந்து பாக்கிறதுக்குள்ள, உங்க சண்டை ஆறிப்போன பப்சு மாதிரி ஆகிடுது. பட்டாசை நெனைச்ச நேரத்துல, எப்ப வேண்ணா வெடிக்கலாம்தான். இல்லைங்கல. ஆனா அதை தீபாவளி நேரத்துல வெடிச்சி பாத்தாதான் மதிப்பு, சந்தோசம், அழகு. அதையும் புரிஞ்சிக்கோங்க.

சண்டை போடுறவங்கள விட மோசம், இந்த கீழ இருக்கிற ரெண்டு கேட்டகரி ஆளுங்கதான்.

இந்த சண்டைய முழுசா படிச்சவங்க + ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவங்க:-
ஆமா, நீங்கெல்லாம் ஏன் இவ்வளவு இரக்கமே இல்லாம நடந்துகிறீங்க. லேட்டா வந்த யாராவது கெஞ்சி கெஞ்சி கேட்டாகூட அஞ்சு பைசாவுக்கு உதவறதில்ல. உங்களுக்கும் ஒரு நாளைக்கு இப்படி தலையும் புரியாம வாலும் புரியாம அல்லாடுற நெலமை வராதுன்னு என்ன நிச்சயம்?

சீனியர்ஸ்:-
நீங்கெல்லாம் எவ்வளவு சண்டைய இந்த மாதிரி பாத்திருப்பீங்க. சண்டைய தவறவிட்ட கஷ்டத்த அனுபவிச்சிருப்பீங்க. இதை சுலபப்படுத்த, அடுத்த தலைமுறைக்குன்னு என்ன செஞ்சிருக்கீங்க? நீங்க ஏன் ஒரு டேடிகேட்டேட் ஐடி ஆரம்பிச்சு மாசம் ஒருத்தரா பொறுப்பு ஏத்துகிட்டு, கான்வோ ஸ்க்ரீன்ஷாட் எல்லாம் அப்டேட் பண்ணி இந்த சந்துலகத்த அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லக் கூடாது?

அப்புறம், இந்த டுலாவ படிச்சிட்டு எனக்கு வேலைவெட்டி இல்லன்னு கீது நெனைச்சிடாதீங்க. இப்போ சந்துல மத்தவங்க போடற ட்வீட்சும் படிச்சிகிட்டு, இதையும் தமிழ்ல எழுதிகிட்டு, மேனேஜர் அனுப்புற மெயில எல்லாம் மொத்தமா செலக்ட் பண்ணி டெலீட்டும் பண்ணிக்கிட்டு..... நேரமே இல்லாமதான் ஓடிகிட்டு இருக்கேன்.

நீங்க எப்பிடியோ வாழுங்க...!! ஆனா மத்தவங்கள லிங்கு கேட்டு அலைய உடாம சந்தோசமா வாழ விடுங்க..!! அவ்வளவுதான்..

Reply · Report Post