ராஜகுமாரி அக்காவுக்கு எங்களது பதில்!


ராஜகுமாரி அக்காவின் டுலாவில் எங்களை பற்றிய சில குறிப்புகள் இருப்பதை பார்த்தோம். அக்காவிடம் அலைபேசியிலோ அல்லது DMமிலோ விவரங்களை எடுத்துரைக்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அக்கா, எங்களுக்கான தனது அறிவுரையை கூற பொது மேடையை தேர்ந்தெடுத்து எங்களது பெயர்களையும் குறிப்பிட்டு டைம்லைனில் விவாதப் பொருளாக்கி விட்டதால் இங்கேயே சொல்வதுதான் சரியென தோன்றியது..

நீங்கள் பொதுவான பதிவாக டுலாவை எழுதிருக்கலாம். அன்று எதிர் கருத்தை பதிவு செய்தது நாங்கள் மட்டுமே அல்ல. பலரும் உண்டு.. எங்களது பெயர்களை மட்டும் எடுத்து குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் தங்களின் அன்பாகவே எடுத்துக்கொண்டு, விளக்கத்திற்கான அவசியம் இருப்பதால் சொல்லுகிறோம்..

முதலில் ஒன்றை மிகத் தெளிவாக பதிவு செய்கிறோம்.. நாங்கள் எந்த காலத்திலும் பெண்களை கொச்சை படுத்துபவர்களை, கேவலமாக, ஆபாசமாக பேசுபவர்களை (அது ஆணாக மட்டுமில்லை, பெண்ணாக இருந்தாலும் சரி) ஒரு போதும் ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டோம்.

கண்ணம்மாவை வரம்பு மீறியும், தகாத வார்த்தைகளால் பேசியவர்களையோ நாங்கள் ஆதரிக்கவில்லை.அவரை மட்டுமல்ல யாரை குறித்தும் இப்படி பேசுபவர்களுக்கு ஒருபோதும் துணை நிற்கமாட்டோம். நாங்கள் அவர் குறித்து சொல்லியதும் சில ட்வீட்டுகள் மட்டுமே..அதிலும் முற்றும் நியாயம் இருப்பதாகவே கருதுகிறோம். அந்த கருத்தில் இன்றும் உறுதியாகவே இருக்கிறோம்.. எந்த மாற்றமும் இல்லை..

கண்ணம்மாவின் கருத்தை அவ்வளவு எளிதாக நீங்கள் கடந்து சென்றிருப்பது மிகப்பெரிய ஆச்சர்யமே. அவ்வளவு எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயமும் அல்ல அது.. நம் நாட்டை பற்றியும், நம் இனத்தை பற்றியும் வேண்டுமென்றே இவ்வளவு கேவலமாக அவர்கள் பேசியது நியாயமா? அதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? அவர்களது ட்வீட்டிற்கு எங்களது எதிர்ப்பை தான் பதிவு செய்தோம். இதில் கோழை தனத்திற்கு சற்றும் இடமில்லை ஏனெனில் சேர வேண்டியவர்களுக்கு தகவல் சேர்ந்து விடுகிறது ட்விட்டரில். நீங்கள் சொல்வதுபோல் அது ஒரு தனி நபருக்கான வினையோ எதிர்வினையோ அல்ல. அவங்களுடைய வினை மட்டுமே.

அவங்க போட்ட ட்வீட்டிலிருந்து தான் பிரச்சனை தொடங்கியது. அதை பொது இடத்தில் சொல்கிறோம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவரது தொடர் கீச்சுகளை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும், அந்த கருத்துக்களை மிக உணர்ந்தே சொல்லி இருக்கிறார் என்பதும், அதை சரி என உயர்த்தி பிடிக்க பிரயத்தனம் செய்திருக்கிறார் என்பதும்.. அதற்கான வருத்தங்கள் ஏதும் அவரிடம் இல்லை என்பதும் தெரிகிறது . இதே கருத்தை யார் சொல்லி இருந்தாலும் எங்களது செயல் அப்படிதான் இருந்திருக்கும். ட்வீட் செய்தது பெண் என்பதால் இன்னொரு பெண் எதிர்வினை சொல்ல கூடாதா??

போகிற போக்கில் விமர்சனம் செய்யவில்லை.. அவங்க ட்வீட்டுக்களை பார்த்து பொறுமை இழந்து ஆழமாக யோசித்த பின்பே எதிர்வினை கொடுத்திருந்தோம்..

பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்வதோ, அல்லது எதிர்க்கக்கூடிய தைரியமோ இல்லாததுதான் காரணம் என்று நீங்கள் சொல்லி இருப்பதும் ஆச்சரியத்திற்குரியதே. எந்த நேரத்திலும், அவசியம் என்றான விஷயங்கள் அனைத்திலும் எங்களது கருத்தக்களை பதிவு செய்ய தயங்கியதும் கிடையாது. எங்களது ட்வீட்டுகளேகூட இதனை உறுதிப்படுத்தும்.

நாளை எங்களை கும்பல் சேர்ந்து பேசினால் என்ன செய்வோம் என்ற கேள்விக்கு: இதுபோன்ற உணர்வுகளை தூண்டி குளிர் காயும் கருத்துக்களை நாங்கள் பேசப்போவதில்லை. எமது வினைக்கான எதிர் வினையை எதிர்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. அவ்வாறாக அல்லாமல் திரும்ப அசிங்கமாக பேசிவிட்டு நிச்சயம் அந்த கான்வோக்களை டெலிட் செய்ய மாட்டோம்

ட்விட்டரை எப்படி கையாள்வது என்பதில் மிக கவனாமாக இருக்கிறோம், எங்களுக்கான வரைமுறைகளையும் உணர்ந்தே இருக்கிறோம்..

அவருக்காக பேசுவதாக நினைத்து எங்கள் பெயரை இழுத்தது வருத்தம் என்ற போதிலும் எங்களது நிலையை விளக்க ஒரு வாய்ப்பாகவே எடுத்துக் கொள்கிறோம். நல்ல அறிவுரைகளை எப்போதும் ஏற்றுக்கொள்வோம், வரவேற்கிறோம்.. தங்களின் அன்பான அறிவுரைக்கு நன்றி..

இப்படிக்கு
ஷீபா & ஜெபா

Reply · Report Post