கிரிக்கெட்தான் அரசியலாக்கியதா?


அன்பின் சித்தப்பு @DiNationS அவர்களின் ட்விட்லாங்கரை வெகுவாக எதிர்பார்த்த நான் இன்று அதற்கான பதில் டுலா போடுவேன் என நினைக்கக் கூட இல்லை. .
கடந்த நான்கு நாட்களாக நடந்த பிரச்சனைகளை ஈழத்தமிழர்களின் கிரிக்கெட் - தேசபக்தி என்று ஆரம்பிக்கிறார்.. ஆனால் பிரச்சினை அதுவல்ல. இலங்கை கிரிக்கெட்டை, தனிநபரை தூக்கிப் பிடிக்கவேண்டும் என்பதற்காக ஒரு நேசத்திற்குரிய சகோதரியின் சொல்லாடல் மற்றும் மட்டமான கருத்து. இந்த பிரச்சினை அரசியலானதன் பின்னணி அதுவே. . ஆனால் அது அந்த கட்டுரையில் இடம்பெறவே இல்லை.

ஈழப்போராட்டம், இந்தியா தமிழர்களுக்கு அளித்த ஆதரவு, புரட்சித் தலைவர், இந்திரா காந்தி, சிலை, இடப்பெயர்வு, அமைதிப்படை, ராஜீவ் படுகொலை என எதையெதையோ குழப்பி அடித்திருக்கிறார். இவை அனைத்தும் கடந்த ஏழு வருடங்களில் அதிகம் பேசப்பட்டு இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்றுணர்ந்தபின் அமைதியாகிப்போன விவாதங்கள்.
ஈழத்தமிழர் உரிமைகளுக்காக போராடும் இரு அதிகார மையங்களில் இந்தியாவும் ஒன்றுதான். ஆனால் 'நாங்களே அடிமைகளாக இருக்கிறார், ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவி செய்வது' என்று ஈழத் தந்தை செல்வாவுக்கு பெரியார் எழுதிய கடினம்தான் அதற்கான பதில். ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்ததை இதுவரையில் செய்தார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஆனால் உங்கள் நன்றியை கடந்த நான்கு நாட்களில் அதிகம் செலவழித்து வீணடித்து விட்டீர்கள்.
தமிழக அரசியல் கோமாளித்தனங்களும், சுயநல நகர்வுகளும் உங்களைவிட அதிகம் நாங்கள் உணர்ந்தவர்கள். அதற்கான பலனை தேர்தலின்போது அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்..
சமீப விவாதங்களை மேற்கோளிட்டால் ஈழப்போராட்டம் தில் எங்களின் பங்களிப்பு கொச்சைப் படுத்தப்படுவதாகவே உணர்கிறோம். உங்களின் விமர்சனம் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழனையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.
கிரிக்கெட் சார்ந்த உங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் எப்படியோ இருக்கட்டும், இந்தியாவின் மீதான தமிழனின் நிலைப்பாடு தனிநாடு கோரிக்கை வரை போனது ஈழப்பிரச்சனைக்காக மட்டுமே.

இதுகுறித்த பிரச்சனை பொதுவிவாதத்திற்கு வரும்போது சம்பந்தப்பட்ட நபரைப் ஒருவரி கூட எழுதாமல் கருத்து சொல்வது ஏற்புடையதல்ல.
அந்த பெண் இதுகுறித்து மறுப்போ, மன்னிப்போ இதுவரையில் கேட்காததும், அதற்கு உறுதுணையாக சிலர் பேசுவதும் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்து கொள்கிறீர்கள். அல்லது வெகு சிரத்தையாக தவிர்க்கிறீர்கள்..
2009 ஈழத்தின் உச்சக்கட்ட போராட்டத்தின்போது கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். தந்தையில்லாமல் கொடுமையான வறுமையில் வளர்ந்த சூழல். புத்தகம் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தில் கல்லூரி முழுவதும் துண்டுப்பிரசுரம் அச்சடித்து வழங்கி கொஞ்சமேனும் போர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்ற சிறுவன் நான் (நாங்கள்) நாய்களாகவே இருந்துவிட்டு போகிறோம்..

குறிப்பு : இன்னும், இனியும் ஈழத்தமிழனுக்கு ஒரு பிரச்சினை எனில் தமிழகத்தில் எதேனும் ஒரு மூலையில் இருந்து முதல் குரல் ஒலிக்கும். இது சம்பந்தமாக இனி எந்த விவாதமும் கிடையாது.. நன்றி.

Reply · Report Post