பெண் ஐடிகளை வளர்த்துவிட்டு ஏமாறும் அப்பாவி புதுமுகங்களுக்கு சமர்ப்பணம்


புது வரவாய் வந்திருக்கும் என் பாசமிகு தமிழ் ட்விட்டர் தம்பிகளுக்கு

தம்பிகளா...
பிரபலம் பிரபலம்னு உங்களுக்கு நீங்களே தாழ்வு மனப்பான்மை கொண்டு வராதிங்க...நீங்களும் நாளைய பிரபலம்தான்...
பக்கத்து வீட்டுக்காரன் பணக்காரன் பணக்காரன்னு வயிறு எரியாம அவன் எப்டி பணக்காரன் ஆனான்னு சிந்திச்சாதான் நீயும் பணக்காரன் ஆவ முடியும் அத விட்டுட்டு அவன பாத்து திட்டிட்டே இருந்தா இன்னும்தான் உன்னோட நிலை கீழதான் போவும்.....

பொண்ணா பேக் ஐடியானே தெரியாம பெரியவங்க படிச்சவங்க கிட்ட நாகரீகம் இல்லாம நடந்துக்காதிங்க...ஏற்கனவே இந்த மாதிரி அனுபவம் எங்களுக்கு நெறயா இருக்கு..

ஏன் அது பொண்ணாவே இருக்கட்டுமே..உனக்கு ஆபத்துனா ஒரு நண்பன்தான் வருவான் அந்த பொண்ணோ பேக் ஐடியோ இல்ல .
.
காப்பி பேஸ்ட் தவறுன்னு ஏன் சொல்றோம்..இத நீங்க அங்கீகரிச்சா நாளைக்கு இதுவே நடைமுறை ஆகிரும்..பல ஆயிரம் பேர் இருக்க இந்த தமிழ் ட்விட்டர்ல..உரிமையாளர்க்கு அடையாளம் இல்லாம போய்ரும்

எல்லாத்துக்கும் நெஞ்ச நிமித்திட்டு வரது பெருசு இல்லபா..உங்கள மாதிரிதான் நாங்களும் ஒரு காலத்துல...ஆனா இப்போ அதெல்லாம் விட்டோம்னு அர்த்தம் இல்ல பொறுப்புகள் குடும்பம் வேலை வியாபாரம்னு ஓய்வில்லாத வாழ்க்கயில் நிம்மதியை தேடித்தான் இங்க வரோம்..இங்கயும் அந்த டென்சன் வேணாம்னுதான் பதில் பேசுறதில்ல..நேரம் கிடைக்கும்போது உங்கள கண்டிக்க்கவும் செய்றோம்

நிகழ்காலத்த மட்டும் வச்சு நீங்க பேசுறிங்க ..எதிர்காலத்து மனசுல வச்சு நாங்க பதில் சொல்றோம் அதுதான் பக்குவப்பட்ட நிலைமேல சொன்னா எல்லாமே நான் ட்விட்டர்ல பாலோ பன்னதாலதான். இன்னிக்கி நார்த் மெட்ராஸ் ட்விட்டர் செயலாளர் போஸ்டிங் ஜாக் எனக்கு குடுத்துருக்காரு..

எங்க ஏரியா டீக்கடைல வேல வெட்டியே இல்லாம தினமலர்ல வரிவிளம்பரம் மொதகொண்டு விடாம வாசிக்கிற ஒருத்தர ட்விட்டர் கூட்டியாந்தேன்...இப்போ அவர் இலக்கியவாதி.போஸ்டிங் வாங்கிட்டாரு.

சண்ட வந்த விலக்கிவிடாம வேடிக்க பாப்பான் என் நண்பன் ஒருத்தன் அவன இங்க கூட்டி வந்தேன் மூனே மாசத்துல நடுநிலைவாதி போஸ்டிங் வாங்கிட்டான்

நம்ம பிரசாந்த் அண்ணன் இதெல்லாம் பாலோ பண்ணிதான் ஜாக் ரெகமெண்டேசன்ல இன்னிக்கி அவதார் ரெண்டாம் பாகத்துல முக்கிய வேடத்துல நடிக்கிராப்டி.

இவ்ளோ ஏன் குஜராத்ல இருக்க என் நண்பர் ஒருத்தர் கூட இது வர காப்பி பேஸ்ட்யே பண்ணாததுக்கு வாஜ்பாய் கையால அப்போவே
“20ஆம் நூற்றாண்டின் கறை படியாத கரம்” விருது வாங்குனாரு

இத டைப் பண்ணும்போது கூட கை படபடன்னு வந்துச்சு எதிர்கால தமிழ் டிவிட்டர்கள மனசுல நெனச்சுதான் உயிரை பணயம் வச்சு இத எழுதி முடிக்கிறேன் ... நீங்கல்லாம் நல்லா வரணும் கண்ணுங்களா..

நெஞ்சார்ந்த அன்புடன்..
பிரபலரைட்டர்.தமிழ் குடிமகன்.SSLC
( வெறும் SSLC பெயிலான என்னோட கருத்துக்களை பாத்து ஜாக் என்னை கவுரவிக்க குடுத்ததே இந்த “பிரபல ரைட்டர்” பதவி )

குறிப்பு: இவ்ளோ சொல்லியும் நீங்க திருந்தலைனா விரைவில் இதன் இரண்டாம் பாகம் வெளியிடுறத தவிர எனக்கு வேற வழி தெரிலப்பா

Reply · Report Post