ஊடகங்கள் கைவிட்டுவிட்ட இந்த கொடுமையை நீங்களாவது கொஞ்சம் படியுங்கள் ப்ளீஸ்..!

காஞ்சிபுரத்தை சேர்ந்த அந்த 19 வயது மாணவி யோகலட்சுமி.
வண்ண கனவுகளுடன் படிப்புக்காக போரூர் இராமசந்திரா மருத்துவ கல்லூரியில் சேர்ந்தாள். கல்லூரி விடுதியில் தங்கிபடித்தாள்.

அங்கு சனியனாய் வந்தவள் இரண்டாம் ஆண்டு மாணவி திருப்பத்தூரை சேர்ந்த கோட்டீஸ்வரி.

ஆரம்பித்தது ராகிங் கொடுமை.
முதலாம் ஆண்டு தானே என்று பல்லைக் கடித்து கொண்டு பொறுத்து கொண்டாள் யோகலட்சுமி. ஆனாலும் என்ன வன்மமோ தெரியவில்லை ஆண்டு முழுவதும், ஏன் இரண்டாம் ஆண்டிலும் ராகிங் கொடுமை தொடர்ந்துள்ளது.

பலமுறை ஹாஸ்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டு கொள்ளவில்லை.

பெற்றோரிடம் இனியும் என்னால் தாங்க முடியாதுன்னு சொல்லி பார்த்தாள் யோகலட்சுமி. இன்னும் இரண்டு வருடம் தானேம்மா பொறுத்துக்கொள் என்றனர்.

எங்கே பொறுப்பது... கோட்டீஸ்வரி, அவளது தோழிகளின் ஏச்சும் பேச்சும் சீண்டல்களும் அவமானங்களும், வெளியே சொல்ல கூச்சப்படும் உடல் ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளது.

பொறுத்து பொறுத்து பார்த்த யோகலட்சுமி தாங்க முடியாமல் தன் உயிரையே மாய்த்து கொண்டாள். ராகிங்கொடுமை ஒரு மாணவியின் உயிரை பறித்துவிட்டது.

16 பக்க கடிதமாக தற்கொலைக்கான காரணத்தை எழுதிவைத்து விட்டுதான் தூக்கிட்டு கொண்டாள்.
கடிதம் முழுதும் கோட்டீஸ்வரி மற்றும் தோழிகளின் ராகிங் மற்றும் ஹாஸ்டல் நிர்வாகத்தின் அலட்சியத்தை குறிப்பிட்டிருக்கிறாள்.

போலீஸ் கோட்டீஸ்வரியை மட்டும் கைது செய்துள்ளது.

அப்போ ஹாஸ்டல், கல்லூரி நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை.?

ராகிங்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.? செத்துபோனவள் சாதாரண கிராமத்து பெண் என்பதாலா அல்லது கல்லூரி நிர்வாகத்துடன் காவல்துறைக்கு பெட்டிகள் கைமாறியதாலா..?

தமிழ் ஊடகங்களில் யாருமே இப்படி ஒரு கொடுமை பற்றி அலட்டிகொள்ளவில்லை

இதே இறந்தவள் ஒரு வடநாட்டு மாணவியாக இருக்கட்டுமே.. ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிகொண்டு ஒப்பாரி வைத்திருப்பார்கள்.

என்ன ஊடக தர்மம்..!? என்ன சமுதாய அக்கறை..?!

(இன்று இந்த செய்தியைப் படித்ததும் வேறெந்த வெட்டிச் பேச்சுக்கும் இடமில்லை..! முடிந்தால் இதை மட்டும் இன்னும் கொஞ்சம் பேர் ஷேர் செய்து யாரிடமாவது கொண்டு சேர்த்தால் நல்லது என்று நினைத்தேன்.

Reply · Report Post