ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவனின் அதிகார நுழைவு போரட்டமென்பது நீங்கள் மகாத்மா என கொண்டாடும் மனிதர் முதல் ஆதிக்கசாதியை சேர்ந்த கடைநிலை மனிதர்கள் வரை காட்டிய எதிர்ப்புகளில் எப்படி சிக்குண்டு சிதைந்து கிடந்தது என்பதை நீங்கள் அம்பேத்கர் வாழ்கை வரலாற்றை வாசித்திருந்தாலோ அல்லது அவர்வேடத்தில் மம்மூட்டி நடித்த அந்த மாமேதையின் பயோகிராபி திரைப்படத்தை பார்த்திருந்தாலோ ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்ககூடும்

" கோட்டாவுல வந்தவன் தானே... "இடஒதுக்கீடு வாங்கிட்டு எல்லாத்துலையும் நுழைஞ்சிடறானுக... " என இன்றளவும் எளிதாக ஏளனம் செய்து கடந்து போகும் ஆதிக்க சாதிகளால் கட்டமைந்த சமூகத்தில் அப்படியான கோட்டாவில் வந்தவன் தன்னை அதிகாரத்தின் நடுவே நுழைத்துகொள்வது எந்தவகையான உணர்வுப்போராட்டத்தை சார்ந்தது என்பதற்கு ஜெயமோகனின் "நூறு நாற்காலிகள்" சிறுகதை மற்றுமொரு ஆகச்சிறந்த சாட்சி...

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய இடஒதுக்கீட்டின் அவசியத்தை அப்படி உள்நுழைந்த பின்பு ஆதிக்கங்களுக்கும் சமுதாயத்திற்கும் நடுவே அவர்களின் மனரீதியான போராட்டத்தை இனி உங்கள் வாழ்நாளில் எப்போதும் கடந்துவிட முடியாதபடியாக ஆயிரம் சம்மட்டிகளால் அடித்து சொல்லும் சிறுகதைதான் "நூறு நாற்காலிகள்"

நாயாடி எனும் நரிக்குறத்திக்கும் அவளது மகனான ஒரு கலெக்டருக்கும் இடையிலான இந்த கதையை ஒரே ஒரு கண்ணீர்த்துளி கூட இல்லாமல் நீங்கள் கடப்பதென்பது அத்தனை சாத்தியமானதில்லை ஒருவேளை இடஒதுக்கீடு தேவையற்றது என யோசிக்கும் பிற்போக்கு ஆதிக்க சாதிகள் கிண்டலாக சிரித்தபடி கூட இந்த கதையை கடந்துபோகலாம்தான் அப்படியானவர்களுக்கு சொல்ல என்னிடம் எதுவுமே இல்லை இடஒதுக்கீடு தேவையா இல்லையா என குழப்பிக்கொண்டிருக்கும் சிலர் தயவு கூர்ந்து இந்த கதையை வாசியுங்கள் ஆண்டாண்டுகளாக நடக்கும் வர்க போராட்டத்தை ஆதிக்க சாதிகள் இழைத்த அநீதிகளை இதை விட எளிமையாக யாராலும் சொல்ல முடியாது இனி எப்போதும் இறக்கி வைக்க முடியாத ஒரு பெரும் பாவத்தின் கறை ஆதிக்க சாதிகளின் கைகளில் எப்போதும் உள்ளது என்பதை இந்த கதையின் வாயிலாக நீங்களும் அறியவேண்டுமென்ற எண்ணத்தோடும் காலையில் இந்த சிறுகதையை படித்த பின்னாக எனக்குள் எழுந்த அலறல்களை இறக்கி வைக்க இடம் கிடைக்காமல் அலைந்த வலியிலும் தற்போதைக்கு இங்கே இறக்கி வைக்கிறேன் தாழ்த்தபட்டவர்கள் நிமிர்ந்து உட்கார லட்சம் நாற்காலிகள் தேவைப்படும் இந்த சமூகத்திற்கு ஜெயமோகன் எனும் பெரும் படைப்பாளியின் அறம் தொகுப்பிலிருந்து "நூறு நாற்காலிகள்" - சிறுகதை ( நன்றி )

http://www.jeyamohan.in/?p=12714

http://www.jeyamohan.in/?p=12716

http://www.jeyamohan.in/?p=12718

http://www.jeyamohan.in/?p=12872

Reply · Report Post