அந்தகாலத்துல நாங்க எல்லாம் ட்வீட்டர்க்கு வரையில தமிழ் ட்வீட்டர் வருத்தப்படாத சீனியர் சங்கம் எப்படி தமிழ் சந்த நடத்தினாங்கன்னு சின்னதா ஒரு கொசுவத்தி

ஒருவேள எந்த கவலையுமில்லாம கண்டபடி கீச்சி திரியும் புது வாலிபர் சங்கங்களுக்கு உபயோகமாவும் இருக்கலாம் மேற்கொண்டு
படிங்க

எங்க சீனியர்லாம் மிக சிறந்த ஆளுமைகளா இருந்தாங்க இப்பவும் இருக்காங்க அவங்களுக்குள்ள எப்பவும் கருத்து மோதல் கடைசி வரைக்கும் நடந்தாலும் சின்ன கெட்ட வார்த்தைகளோ தனி மனித தாக்குதல்களோ கொஞ்சம் கூட இருக்காது

ரெண்டாவது அவங்க புது ட்வீட்டர்களோட திறமைய வெளிய கொண்டு வரவும் அவங்கள எல்லார்கிட்டயும் அறிமுக படுத்தவும் தினமும் டாப் 10 ட்வீட்ன்னு ஒரு பிளாக்ல அன்னைக்கு வர சிறந்த பத்து கீச்சுகள வெளிவிடுவாங்க அதுல நம்ம கீச்சு திறமைய பாத்துதான் நிறைய பேர் புதுமுகங்கள பாலோவ் பன்னுவாங்க

அடுத்து தமிழ்குருவிகள்ன்னு ஒரு பிளாக் நடத்தி அதுல அழகா எழுதுற ஒரு 10 கீச்சர்களையும் அவங்க சிறந்த கீச்சுகளையும் வாராவாரம் வெளியிடுவாங்க

அப்புறம் பாரதின்னு ஒருத்தர் மிக சிறந்த கீச்சுகள ரீடிவீட் பன்னுவார்

இப்படியாக இந்த மாதிரி ஆரோக்கியமான அனுகுதல்களாலும் போட்டிகளாலும் இங்க நிறைய பேருக்கு எழுத்து திறமைய அவங்களுக்கே தெரியாம வெளிய கொண்டு வந்திருக்காங்க

அதன் பிறகான குடும்ப வேலை சூழ் நிலைகள்னால அவங்களால அத தொடர முடியாம போயிருக்கலாம்

தினமும் அழகான கீச்சுகளால் ட்வீட்டருக்கு வரவங்க மனசும் லேசா இருக்கும் இப்ப ஏன் அப்படியெல்லாம் இல்ல தமிழ் சந்துக்கு என்னாச்சு பழைய படி என்னிக்காவது மாறும்ங்குற நம்பிக்கை இன்னும் இருக்கு ஆதலால் என்ன சொல்ல வரேன்னா இங்க இருக்கிறவங்க முகம் தெரியலன்னாலும் அவங்க எழுத்த வச்சு பெருசா மதிப்பாங்க

இன்னும் நிறைய பேர் மிக அழகா எழுதுறாங்க எத்தனையோ பேர் நிஜமா வாழ்ந்துகிட்டிருக்கிற வாழ்கைல இருக்கிற முகத்துக்கு பின்னாடி நிறைய சோகங்கள வச்சிருந்தாலும் இங்ல போலியான ஒரு முகத்தோட சந்தோசமாவும் இருப்பாங்க அப்படி பட்டவங்க இருக்கிற கூட்டத்துக்கு நடுவே இந்த பையன் எவ்ளோ அழகு பாருங்க இந்த பொண்னு தான் இன்னிக்கி அழகான செல்பி முகம்னு சொல்லறது எதாவது ஒரு வகையில போலி முகம் வச்சிருக்கிறவங்கள அவங்க எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும் அவங்கள அழகு குறித்த ஓப்பிடுகள்னால அவங்க பாதிக்க படலாம் அதுகுறித்து நீங்கயெல்லாம் யோசிச்சு அந்த மாதிரி இருக்கிறவங்க திறமைகள மட்டும் முன்னிருத்தற மாதிரி உருப்படியா எதாவது பன்னலாமே ? செல்பிக்கு பதிலாக இப்படியும் அவங்க திறமைகள வெளிய கொண்டு வரலாம்
1.சிறந்த புகைப்படங்கள்
2.சிறந்த கீச்சுகள்
3.சிறந்த கவிதைகள்
4.சிறந்த 140 கதைகள்ன்னு

நம்ம தமிழ் சந்து ஆரோக்கியமா பயனிக்க நாலு பேர் ஒன்னி சேந்து மறைமுகமா சிலரது தாழ்வு மனப்பான்மைகள வளர்க்கிறதுக்கு பதிலா அதே ஓற்றுமையோட நிறைய திறமைகள வளர்த்தெடுக்கலாம் தான மக்களே
நீங்க நினைச்சா நிச்சயமா செய்ய முடியும் ஆதலாம் வெட்டி விளையாட்டுகள்ள ஈடுபடாம ஏதாவது ஒரு வகையில திறமைகள வளர்த்து விடுங்க நண்பர்களே

ப்ப்ரீ அட்வைஸ் கேட்டா கேளுங்க :))

பி.கு: யாராவது சோடா வாங்கிட்டு வாங்களேன் டைப் நான் இல்ல நான் சாதரண மொபைல்ல சதா ரோட்டுல அலைஞ்சி அப்பப்போ ட்வீட் போடுற ஆளு
கணினி சம்பந்த பட்ட வேலை செய்யிற, வெளி நாடுகள்ள வேலை பாக்குற உங்கள போல ஆளுங்களுக்கு டெக்கினிக்கலா பலம் அதிகம் அதனால உங்களால செய்ய முடியும்னு தான் சொல்றேன் _/\_
#TwitterFace2014 :-///

Reply · Report Post