சின்ன வயசுல நண்பர்களுடன் ஊர் சுத்தி முடிச்சிட்டு
வெட்டியா உக்காந்திருக்கும் போது
ஒவ்வொருத்தரா வளர்ந்ததுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு
அவுங்கவுங்க ஆசைய சொல்லிட்டிருப்போம்

ஒருத்தன் கலேட்டர் ஆகணும்பான்
ஒருத்தர் எஞ்சினியர் ஆகணும்பான்
ஒருத்தன் கிரிக்கெட் ப்ளேயர் ஆகணும்பான்

9ம் வகுப்புக்கு பிறகு எனக்கும் @AnishBon இவனுக்கும் பாடி பில்டர் ஆகலைன்னாலும்
ஜிம்லையே படுத்து
ஜிம்லையே வொர்க் அவுட் பண்ணி
ஜிம்லையே பொழுதை கழிக்கணும்னு பேராசை

ஆனா வீட்டுக்கும் ஜிம்முக்கும் ஆகாது
பல நாள் ஜிம்முக்கு போறதே
காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சு வீட்டுக்கு தெரியாமத்தான்

எங்க வீட்டை பொறுத்த வரையில ஜிம்முங்குறது
ஏதோ எவன் கூடயாவது சண்டை போட போறதாத்தான் பாப்பாங்க
ஆனா என்னதான் ஜிம்முக்கு போறதா பாத்தா திட்டுனாலும்
எங்க அப்பா எனக்கு ஒரு வகையில சப்போர்ட்டுதான்
அம்மாக்கிட்ட நிறைய சாப்பாடு எனக்காக ரெக்கமண்ட் பண்ணுவாரு

எப்பவோ சின்ன வயசுல கனவு கண்டது
என் நண்பன் இவன் @AnishBon சாதிச்சிட்டான்
3 வருஷமா துபாய்ல ஜிம்ல கோச்சா வேலை செய்யுறான்
நானும் இவ்வளவு நாள் பார்ட் டைம் ஜிம்ல வேலைக்கு போனாலும்
சொந்த வேலையையும் கவனிக்கனும்ங்குறதுனால முழு திருப்தி கிடைக்கல

கொஞ்ச நாளா நாங்க ரெண்டு பேருமா சேந்து
துபாய்ல ஜிம் ஒப்பன் பண்ண ப்ளான் பண்ணி
நடக்கல
அப்புறமா ஊர்ல ஒரு ஜிம் ஆரம்பிக்கலமனு ப்ளான் பண்ணோம்
சரி இரண்டு வருஷம் காண்ட்ராக்ட் முடிஞ்சு ஊருக்கு போய் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும் போது

இப்போ சொந்தமா அதுவும் வெளிநாட்டுலையே பிரமாண்டமா
ஒரு ஜிம் ஓப்பன் பண்ணியிருக்கேன்

நினைக்கும்போதே பெருமையா இருக்கு
நம் விருப்பத்தில் மாறாதிருந்தால், விருப்பம் கண்டிப்பா நிறைவேறும்!

Reply · Report Post