போரூர் சம்பவம் நடந்து மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் வருவதற்கு முன்பே, முதல் ஒரு மணி நேரத்திலேயே அங்கு நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் வந்திருந்து மீட்புப் பணிகளில் உதவிடும்போது, யாரோ ஒருவர் நூற்றுக்கணக்கான் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கி வந்து மீட்புப் பணியிலிருந்தவர்களுக்குத் தந்துள்ளார். இன்னுமொருவர், ஓடிச் சென்று தெருவில் சென்று கொண்டிருந்த டீ விற்கும் சைக்கிளை அப்படியே அழைத்து வந்துள்ளார். டீ வண்டிக்காரர் அங்கிருந்த எல்லோருக்கும் டீ கொடுத்துள்ளார். நண்பர், தனது பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து டீ வண்டிக்காரருக்கு தர முயல, டீ வண்டிக்காரர் அப்போது சொன்னது, "அய்யே.. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நா ஓடிப் போய் இன்னொரு கேன் டீ கொண்டுட்டு வரேன். நீ போய், மாட்டிட்டு இருக்கவங்க யாரையாவது தூக்க முடியுமான்னு பாரு.. அத்த வுட்டுட்டு, காசு கொடுக்குது பாரு"..!! இதை அங்கிருந்த நண்பர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு, நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு... என சொல்லும் போது கண்ணில் நீர் எட்டி பார்ப்பதை அடக்க முடியவில்லை.. இன்னும் மனிதம் சாகவில்லை..! #fb

Reply · Report Post