
Doha Talkies · @dohatalkies
17th Jul 2013 from TwitLonger
தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் அழிவிற்கு விடுதலைபுலிகளே காரணம்!!
எத்தனை கொலைகள் செய்தார்கள், எவரைபேச விட்டார்கள், எவரை செயல்பட விட்டார்கள், எதனை சரியாக செய்தார்கள்..
இவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள், எத்தனையாவது குறைந்த பட்சமாவது சரியாக பயன்படுத்தினார்களா?
பயன்படுத்த முற்பட்டார்களா? இந்தியாவும் சர்வதேசமும் உங்களுக்கான ஏக போகத்தையும் ராஜதந்திர அந்தசத்தை தந்தார்கள் அல்லவா? எதையாவது சரியாக கையாண்டீர்களா? மாறாக மாற்றுக் துப்பாக்கி வேட்டு வழங்கி கொலை வெறி பிடித்து அலைந்தீர்கள் அல்லவா?
உங்கள் அமைப்பின் முதல் தலைவர் செட்டியை கல்வியங்காட்டில் வைத்து தற்போதைய தலைவர் கொன்ற போதே இதற்கான அத்திவாரத்தை போட நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள். இதன் பின்பு சுந்தரம் என்று ஆரம்பித்து அமின், றேகன் என்று தொடர்ந்து சிறிசபாரத்தினம் பத்மநாபா அமிர்தலிங்கம் என்று தடயங்கள் பதித்து ராஜீகாந்தி என்று வெளிநாட்டுத் தலைவர்கள் என்று யாரையும் விடவில்லை. இதன் பின்பு பிரேமதாச என்ற உங்கள் (இந்திய படைக்காலத்து)மீட்போனை? விட்டா வைத்தீர்கள்? புத்திஜீவிகள் அதிபர் ஆனந்தராஜ, விரிவுரையாளர் ராஜினி, நீலன், கேதீஸ்வரன் என்று தொடர்ந்தது உங்கள் துப்பாக்கி கைங்கரியங்கள் இன்றைய நிலமை உங்களுக்கு ஏற்பட பெரிதும் உதவின.
இது மட்டுமா ஆண்டாண்டு காலமாக எங்களுடன் ஒருமித்து வாழ்ந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவில் அடித்து விரட்டியும், தொழுகையின் போது துப்பாக்கியால் மரண சாதனம் எழுதி சாதனை புரிந்ததாக தம்பட்டம் அடித்தும், 1985 ம் ஆண்டு அனுராதபுரத்தில் உறக்கத்தில் இருந்த சிங்களப் பொது மக்களுக்கு துப்பாக்கியால் எல்லாளனைக் காட்டி மகிழ்ந்தும் சர்வ தேசத்திடம் நீங்கள் யார் என்பதை சாட்சியப்படுத்தினீர்களே! இதற்கெல்லாம் இன்று அனுபவிக்கின்றீர்கள்!! தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தானோ?
நீங்கள் திருந்துவீர்கள் என்ற நம்பிக்கை என்றும் எமக்கு ஏற்பட்டதும் இல்லை ஏற்படப்போவதும் இல்லை. அதே போல் உங்கள் அழிவிற்கான ஆரம்பம் எப்போதே ஆரம்பித்து விட்டாலும். இன்று உங்களுக்கு சேடம் இழுக்கும் நிலமை ஏற்பட்டு விட்டது. வெகு விரைவில் புலிப் பாசிசத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் சங்குதான்.