ஈழத்தில் கொல்லப்பட்ட நம் இரத்த சொந்தங்களுக்காகவும், கடலில் கொல்லப்பட்ட நம் மீனவ சகோதரர்களுக்காகவும் பழிவாங்கிட, இராசபக்சே அரசுக்கு ஆயுதம் வழங்கிய காங்கிரசு அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கியே தீருவோம் http://tl.gd/8nr30p என சூளுரைத்தோம்!

#TNfisherman பிரச்சினையில் ட்விட்டர் மூலம் மக்களை ஒருங்கிணைத்து மீடியாக்கள், சுஷ்மா சுவராஜ் அவர்களின் கவனம் ஈர்த்தோம்! மேடம் அவர்களிடம் SM.கிருஷ்ணாவும் வாக்குறுதி வழங்கினார்! ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பணம் கொடுக்கப்பட்ட பிரச்சினை எழும்பி, நம் மீனவர் பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேசாது மறந்தார்!

தமிழர்களை எங்கேனும் ஒற்றுமைபடுத்தி நாம் கண்டதுண்டா? ஈழத்தமிழர்காக நாம் ஒன்றுபடத் தவறினோம்! மீனவர் விசயத்தில் ஒன்றுபட்டோம்! இரு இனஒழிப்பு வேலைக்கும் காரணமான நம் பொதுஎதிரி காங்கிரசை ஒழிப்பதற்கும் ஒன்றுபடுவோம்!

ட்விட்டரில் பேசி என்ன ஆகிடப் போகிறது என நினைப்பதும், என் ஒரு ஓட்டு போடா விட்டால் குடி மூழ்கி விடாதென நினைப்பதும் ஒன்றே! எகிப்தெனும் நம்மைவிட சிறிய நாட்டில் twitter,facebook ஆல் தானே புரட்சி சாத்தியமானது! #DefeatCongress ஆரம்பித்த சிறிது நேரத்தில் trend ல் வரலையா?
கட்சிகள் மிகசிறிய வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுகின்றன!

எனவே தவறாது உங்கள், உங்கள் குடும்பத்தாரின் வாக்குகளை காங்கிரசுக்கு எதிராக போடுங்கள்! ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள்! இதுவே ஈழத்தில் கொல்லப்பட்ட நம் சொந்தங்களுக்காக பழிவாங்குதலும் அஞ்சலியுமாக இருக்கும்!

#DefeatCongress ட்விட்களின் மூலமாக ஊழலுக்கெதிராக இனப்படுகொலைக்கெதிராக ஒருவரின் மனநிலையாவது நம்மால் மாற்றிட இயலாதா? பின்னே மற்ற வீண் ட்விட்டுகளால் மட்டும் என்ன பயனோ? பழிவாங்குவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரேயொரு தோட்டா நம் ஓட்டு! சேர்ந்து சுடுவோம் செத்து ஒழியட்டும் நம் பொது எதிரி!

காங்கிரசு போட்டியிடும் தொகுதிகளில் இருப்பின் பலமான எதிரணி வேட்பாளர்க்கு வாக்களியுங்கள்! சுயேட்சைகளுக்கு போடுவது ஓட்டு பிரிந்து வீணாகும்! காங்கிரசு போட்டியிடாத தொகுதியில் உங்கள் விருப்பபடி ஓட்டளியுங்கள்! இன்னும் 5வருடம் ஆள விட்டால் இலங்கையில் நம் சொந்தம் எதுவும் மிஞ்சாது!

ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் தானே நம் சொந்தங்களை அழிக்க துணை போனார்கள்! அதை பிடுங்குவது தானே சிறந்த பழிவாங்குதல் இல்லையா? நம் ஈழச்சொந்தங்களை எண்ணிப் பார்ப்பீர்! சிந்திப்பீர்! செயல்படுவீர்!
ஏப்ரல் 10,11,12 களில் #DefeatCongress இணைய பரப்புரையில் பங்கெடுங்கள்! உங்கள் வாக்கை நம் பொது எதிரியை தோற்கடிக்க போடுங்கள்! கீழ்கண்ட பேஸ்புக் பக்கத்தை Like செய்து பேஸ்புக் நண்பர்களையும் சேர்த்திடுங்கள்
http://facebook.com/DefeatCongress
ாங்கிரசை தோற்கடித்து மாநில கட்சிகளை அதன் பிடியிலிருந்து விடுவிப்போம், நம் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்!

Reply · Report Post