சென்னை சேலம் பசுமை சாலை எனும் கனிமவேட்டை


தமிழ்நாட்டில், இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை சென்னையிலிருந்து சேலத்திற்கு ரூ.10,000 கோடி செலவில் 274 கிமீ நீளம் கொண்ட சாலை எடப்பாடி சாமியின் ஆசியில் போடப்போறாங்க.

சேலத்திற்கு ஏற்கனவே உளுந்தூர் பேட்டை & வேலுர் வழியாக 2 சாலைகள் & பெங்களுர் கிருஷணகிரி வழியாக ஒரு சாலை & விழுப்புறம் ஆத்தூர் மற்றும் வேலூர் வழியாக ரயில் பாதை & விமான நிலையம் இருக்கும் போது எதுக்கு வெட்டியா புதியதாக சாலை?

274 கிமீ பசுமை சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ, திருவண்ணாமலை செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிமீ, தர்மபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 53 கிமீ & சேலத்தில் வாழப்பாடியிலிருந்து சேலம் நகரம் வரை 38 கிமீ அமைக்கப்பட உள்ளது.

274 கிமீ கொண்ட பசுமை சாலையில் 250 கிமீ வனப்பகுதி & மலைகளில் அமையப்போகிறது. சாலை சேலத்துக்கு என சொன்னாலும் உண்மையில் வனம் & மலைப்பகுதியில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிப்பதே திட்டமாகும்.
பசுமை சாலை அமைய இருக்கும் பகுதிகள் எங்கும் கனிம வளங்கள் நிறைந்து உள்ளன. சேர்வராயன் மலையில் பாக்சைட் (ஆலுமினியம்) 53 லட்சம் டன் உள்ளது. சேலம் கஞ்சமலையில் 7.5 கோடி டன் இரும்பு தாது உள்ளது
அருர் யில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மாலிப்டினம் உறுதியான ஸ்டீல் அலாய், டாங்க் & ரானுவ கவசங்கள் செய்ய பயன்படும்
திருவண்ணாமலையில், பசுமை சாலை வரும் பகுதியில் இரும்பு தாது ஹெமடைட் & மேக்னடைட் சுமார் 14 கோடி டன் & பிளாட்டினம் மற்றும் Rare earth elements உள்ளன.

புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக சென்னை-சேலம் இடையிலான தொலைவு 60 கிமீ வரை குறையும், வெறும் 3 மணிநேரத்தில் சென்னைக்கு வரலாம் & வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் என வடை சுட்டாலும் உண்மையான நோக்கம் தாது வளங்களை திருடுவது.

எடப்பாடி சாமி & பரிவாரங்கள் பத்து தலைமுறைக்கு சோத்து சேர்க்க போட்ட திட்டமே பசுமை வழிசாலை.

Reply · Report Post