அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்டம் முடிந்து அமைச்சர் வெளியேறுகிறார்.

கூட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டு மைக்கை நீட்டிக் கொண்டு ஊடகவியலாளர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். அவர் பேச மறுக்கிறார்.

திரும்பத் திரும்ப அவரை வற்புறுத்தவே தன் முன்பாக மைக்கை நீட்டிக் கொண்டிருக்கும் பெண் நிருபரிடம் பேசத் தொடங்குகிறார்.”

“கூட்டத்தில் என்ன சார் நடந்துச்சி?”

“உங்களுக்கு ஸ்பெக்ஸ் ரொம்ப அழகா இருக்கு மேடம்”

“எப்பவும் போட்டுக்கிட்டுதான் சார் இருக்கேன்”

“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க...”

“சார் என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுச்சி...”

“இப்போ ப்ரெஸ்ரிலீஸ் கொடுப்பாங்க மேடம்”

“என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுச்சி... ஏதாவது பேசுங்க”

“சீனியர் லீடர்ஸ் பேசுவாங்க....”

அப்போது அமைச்சரோடு வந்தவர்களின் குரல் கேட்கிறது. “தங்கச்சி பாப்பா அப்படியெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கக்கூடாது”

திரும்பவும், “சார்.. சார்..” என்று பத்திரிகையாளர்கள் குரல் கொடுக்க, அமைச்சர் சிரித்தவாறே, “அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க..” என்று சொல்லிவிட்டு காருக்கு போகிறார்.

இதிலென்ன sexiest remark இருந்துத் தொலைக்கிறது என்று தெரியவில்லை. பத்திரிகையாளர்களிடம் ஜோவியலாக sportive ஆக இருக்கதான் அமைச்சர் முயற்சித்திருக்கிறார். பொதுவாக பேசமறுக்கக்கூடிய அமைச்சர்கள், தொல்லை கொடுக்கும் நிருபர்களை எதிர்கொள்ளும் விதமே வேறு. அப்படியிருக்க விஜய்பாஸ்கர் நகைச்சுவையாக சொன்னதைவைத்து அவர் மீது பாலியல் அவதூறு சுமத்துவது கொஞ்சமும் நியாயமல்ல.

தன்யா & ஷபீர் கும்பல் எந்த ஒரு பிரச்சினையை கையிலெடுத்தாலும், கண்ணை மூடிக்கொண்டு அதற்கு நேரெதிர் நிலையை நாம் எடுப்பதுதான் சரியாக இருக்கும் போல :)

இப்படிதான் முன்பு ஃபேஸ்புக்கில் ஓர் ஆண்ட்டி, திடீரென்று என்னை 'sexiest' என்று சொல்லி பரபரப்பை கிளப்பியது. என்னுடைய நீண்டகால நண்பர்களேகூட திடீரென்று என்னுடைய கற்பை சந்தேகித்து கடுமையான மனவுளைச்சலை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு சீதை மாதிரி நெருப்பில் குதித்துதான் என்னுடைய கற்பு மீதான களங்கத்தை துடைத்தெறிய வேண்டியிருந்தது.

ஆண் என்றாலே பெண்ணை ‘அப்படிதான்’ பார்ப்பான் என்கிற மூடநம்பிக்கையிலிருந்து இந்த ஃபேக் பெமினிஸ்ட் ஆண்ட்டிகளும், ஆல் பர்ப்பஸ் அங்கிள்களும் வெளிவரவேண்டும். ஒவ்வொரு ஆணுக்குமே ஆயா, பெரியம்மா, அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லாரும் உண்டு.

விதிவிலக்காக சில பொறுக்கிகள் இருக்கலாம். ஆனால், அந்த பொறுக்கிகளைதான் இந்த பெமினிஸ்டுகள் - அவர்களது பொறுக்கித்தனத்தை உணர்ந்தும் - உத்தமர்கள் மாதிரி சித்தரிக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. அந்த பொறுக்கிகளும் பொத்தாம் பொதுவாக ஃபெமினிஸம், பெரியார், புரட்சியென்று பேசி தங்கள் பொறுக்கித்தனத்துக்கு அங்கீகாரம் தேடிக்கொள்கிற அவலம் அதிகரித்துக் கொண்டே போகிறது :(

Reply · Report Post