நிலத்தடி நீரும் மணல் திருட்டும்


நிலத்தடி நீர் ஆந்திரா சாப்பாடு மாதிரி அன்லிமிட்டட் அல்ல. மழை நீர் நிலத்தடி நீராக மணலில் சேமிக்கப்படுகிறது.

நிலத்தடி நீரை சேமிக்க மணல் முக்கியம். ஒரு யூனிட் ஆற்று மணலில் (100 கன அடி) சுமார் 40-50 கன அடி (1000-1500 லிட்டர்) நிலத்தடி நீரை சேமிக்கலாம். (Unconsolidated alluvial sand porosity 40-50%)

ஒரு லோடு மணலை எடுத்தால் நாம் 2000-3000 லிட்டர் நிலத்தடி நீர் சேமிக்கும் திறனை இழக்கிறோம்.

தமிழகத்தில் 1990 யில் இருந்து பெருளவு மணல் திருட்டு ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு 50,000 லோடு https://en.wikipedia.org/wiki/Sand_mining_in_Tamil_Nadu http://www.thehindu.com/news/cities/chennai/sand-crisis-in-tn/article18269193.ece மணல் எடுக்கப்படுகிறது

1990-2016 வரை நாம் ஆற்று படுகையில் இழந்த மணல் 26X365X50,000= 47,45,00,000 லோடு. 94,90,00,00,000 கன அடிகள். 9.5 ஆயிரம் கோடி கன அடி. ஒரு லோடில் 80-100 கன அடி நீரை சேமிக்கலாம்.

4,745 ஆயிரம் கோடி லோடில் 47,450,000,000 கன அடி நீரை சேமிக்கலாம். 1 TMC = 1000 மில்லியன் கன அடி. 26 வருடங்களில் நாம் ஆற்றுப்படுகையில் 47.5 TMC நீர் சேமிக்கும் திறனை இழந்துள்ளோம்.

ஆற்றில் மணலை எடுக்காமல் இருந்தால் இயற்கையாக செலவு இல்லாமல் ஆற்று படுகையில் நீரை சேமிக்கலாம். கோடி கணக்கில் செலவு பிடிக்கும் தடுப்பணைகள் அவசியம் இல்லை.

ஆற்று படுகையின் முக்கியம் அறிய http://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-ba8bc0bb0bcdbb5bb3-ba8bbfbb2bb5bb3ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd
http://ww2010.atmos.uiuc.edu/(Gh)/guides/mtr/hyd/smry.rxml

Reply · Report Post