annakannan

Annakannan · @annakannan

7th Mar 2017 from TwitLonger

மீனவரைக் காக்க


இராமேஸ்வரம் மீனவரை நாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என இலங்கை மறுத்துள்ளது. இந்திய அரசு இப்போது புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். தோட்டா என்ன வகை, துப்பாக்கி என்ன வகை, எவ்வளவு தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளது? எத்தனை மணிக்குச் சுட்டார்கள்? அப்போது கடலில் உலாவிய படகுகள் / கப்பல்களைப் புவியிடங்காட்டி மூலம் கண்டறிய முடியுமா? படகில் இவருடன் சென்றவர்கள், இவர் சுடப்படுவதற்கு முன், தொலைபேசியில் பேசியுள்ளார்; அதைக் கொண்டு அவரது படகு இருந்த இடம், அந்தப் பகுதியில் செயலில் இருந்த இதர உள்நாட்டு / வெளி நாட்டுச் செல்பேசிகள் / வாக்கி டாக்கிகள், செயற்கைக்கோள் தொலைபேசிகள், அதில் பகிரப்பட்ட செய்திகள்... எனப் பலவற்றையும் ஆராய வேண்டும். இதன் மூலம், உண்மை என்ன என அறிந்து, குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த முடியும்.

அத்துடன் உடனடியாக இந்தியப் படகுகள் அனைத்திலும் புவியிடங்காட்டியுடன் சிசிடிவி கேமராக்களையும் பொருத்த வேண்டும். இவற்றுக்கு மின் கலம் மூலம் மின்சாரம் வழங்கலாம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஏதுவாக, படகுகளில் தகடுகளைப் பொருத்த வேண்டும். மேலும் இந்தியக் கடல் எல்லையில் டிரோன்கள் எனப்படும் பறக்கும் கருவிகளில் நிழற்படக் கருவிகளைப் பொருத்தியும் கண்காணிக்க வேண்டும். எல்லா மீனவர் செல்பேசிகளிலும் SOS எனப்படும் அவசர உதவி பொத்தானைச் செயலாக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள், இந்தியக் கடல் எல்லையை நெருங்கும் பட்சத்தில், அவர்களைப் புவியிடங்காட்டி மூலம் கண்டறிந்து, எச்சரிக்க வேண்டும். இந்தியப் படகுகள் அனைத்திலும் இந்திய தேசியக் கொடியை, இருட்டிலும் ஒளிரும் வண்ணம் பறக்கவிட வேண்டும்.

Reply · Report Post