'அஜீத்' - ஒரு எதார்த்தமான இமேஜ் #MassiveAjithBirthdayCarnival


தன் அழகின் மீது கர்வம் கொண்டு முக பூச்சுக்கள் பூசி தன்னை அலங்கரித்து, "கேஎப்சி கூட்டி போ, படத்துக்கு கூட்டி போ" என்று ஆண்களின் நேரத்தை தின்று சுற்றவிடும் பெண்கள் ஒரு ரகம்.

தற்பெருமை இல்லாமல், மற்றவர் தன் பின்னால் அலைய வேண்டும் என்று நினைக்காமல் "இதெல்லாம் ஒத்துவராது" என்று எதார்த்தத்தை வெளிப்படையாக பேசிவிடும் பெண்கள் ஒரு ரகம்.

இதில் 80% ஆண்களுக்கு இரண்டாவது ரக பெண்களை தான் பிடிக்கும். இதே போன்ற ஆண்களை தான் 80% பெண்களுக்கும் பிடிக்கும். அஜீத்திற்கு அதிக ரசிகர்/ரசிகைகள் இருக்கவும் இது தான் காரணம்.

தமிழகத்தை பொறுத்தவரை திரையுலகினருக்கு அரசியலில் கிடைத்த வரவேற்பு அவர்கள் தங்களை தேவ தூதர்கள் போல எண்ணிக்கொள்ள செய்தது. படத்தில் வரும் கேரக்டர்களை வைத்து தலைவர்களை தேர்வு செய்தது நம் சாபம்.

சமீபத்தில் நடிகர் சங்க கிரிக்கெட் நடந்தது. ஒரு விவசாயி வெயிலில் விவசாயம் செய்தால் தான் வருமானம். ஒரு கொத்தனார் வெயிலில் வீடு கட்டினால் தான் வருமானம். ஆனால் ஒரு நடிகன் என்ன செய்தாலும் பார்க்க கூட்டம் வரும் என நினைத்தது ரசிகர்களின் மீதான குறைந்த மதிப்பீடு.

புதிதாக பாக்ஸ் ஆபிஸ் அனலிஸ்ட் என்றொரு தொழில் வந்துள்ளது. யாரோ ஒருவர் ஏசி அறையில் அமர்ந்து சில லட்சங்களை வாங்கிகொண்டு படத்தின் வசூலை கோடிகளில் சொல்லுவார், அதைக்கேட்டு ரசிகர்கள் இணையத்தில் சண்டையிடுவார்கள். ரசனை எப்படி தவறான வழியில் பணமாகிறது பாருங்கள்.

இப்படி ரசிகர்களை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கும், தன்னை ஏதோ தேவதூதர்கள் போல எண்ணிக்கொள்பவர்களுக்கும், ரசனையை தவறான வழியில் பணமாக்குபவர்களுக்கும் அஜீத் என்றைக்குமே அலர்ஜியான சொல் தான்.

அஜீத் நடிப்பில் எப்படி என சொல்ல அன்று 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் தபு வெளிநாடு கிளம்பும் காட்சியும், இன்று 'வேதாளம்' படத்தில் டிரான்ஸ்பர்மேசன் காட்சிகளும், சில ஃபிலிம்பேர் அவார்டுகளும் போதும்.

தன் நடனம் இப்படி தான், தன் தலைமுடி இப்படி தான் என்று வெளிப்படையாக தன்னுடைய ஹீரோ இமேஜை உடைத்தும் கடைசி ஐந்து படங்கள் அவர் நடிப்பிற்கு மட்டும் கிடைத்த வெற்றி, மக்களுக்கு அவர்மீதுள்ள மோகம் நிச்சயம் மற்ற நடிகர்களுக்கு புரியாத புதிர் தான்.

அஜீத்க்கு கிடைத்த இந்த இமேஜ் தன்னை அலங்கரித்து கிடைத்த இமேஜ் அல்ல எதார்த்தமான சால்ட் அண்ட் பெப்பர் இமேஜ். அரசியலுக்கு வருவேன் என்பதால் கிடைத்த இமேஜ் அல்ல, "என்னை நடிக்க விடுங்கயா" என்று இயல்பாக கேட்டதன் இமேஜ்.

இப்படி எதார்த்தமாக, இயல்பாக கிடைத்த இமேஜ் தான் இறுதிவரை அப்படியே இருக்கும். அது சிலருக்கு ஆண்டவன் கொடுத்த மக்கள் செல்வாக்கு. அதை யாரால ஒன்றும் செய்ய முடியாது. மற்றபடி அஜீத் பார்ப்பனன், மலையாளம், தெலுங்கன், கொரியன் என்பதெல்லாம் தாழ்வு மனப்பான்மை மட்டுமே.

இப்போது அஜீத்குள்ள பிரச்சனை மேலே குறிப்பிட்ட 80% ஆண்கள் அந்த எதார்த்தமான பெண்ணை தோழியாக நினைக்காமல் 'பத்தினி தெய்வம்' என்று கோவில் கட்டுவது தான். அஜீத்தை 'மனித கடவுள்' என்று வணங்க எதுவுமில்லை. ஆனால் ரசிக்க, கற்றுக்கொள்ள நடிப்பு, தன்னம்பிக்கை, எளிமை என எத்தனையோ உண்டு.

அதைவிட்டு மனித கடவுளாக்கி மற்றவர்களை சங்கட படுத்தாதீர்கள். ஏனெனில் நடிகராயிருந்து முதல்வராக இன்னொரு எம்.ஜி.ஆர் வரலாம். நடிப்பிலே நான் முதல் என்று சொல்ல இன்னொரு கமல் வரலாம். ஆனால் இத்தனை மக்கள் செல்வக்கிலும் சிறிதும் சலனப்படாத இன்னொரு அஜீத் வருவது கடினம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் 'தல'.. உழைத்து வாழுவோம், வாழ விடுவோம்.. 'மே' தின வாழ்த்துக்கள்..!

Reply · Report Post