அமீர்கான்.....


அமீர்கானோ, அமீர் கான் பொண்டாட்டியோ யார் நாட்டை விட்டு போறேனு சொன்னாலும் தப்பு தான். என் நாடு, செத்தாலும் இங்க தான் சாவேன்ற எனப்பு வரனும்...அது கிடக்கட்டும் ஒரு பக்கம். மேட்டருக்கு வரேன்..

அமீர்கான் சொன்ன பேட்டி எல்லாம் முழுசா கேட்டீங்களா? கேக்கலைனா கேட்டுட்டு வந்து போராட்டம் பண்ணுங்க இல்லைனா தீக்குளிங்க என்ன எழவு வேணாலும் பண்ணுங்க.

நாட்ல கொஞ்ச காலமா மதசகிப்பின்மை கம்மியாகிருச்சுனு அந்தாளு சொன்னாரு. என்னமோ உங்களையெல்லாம் சொல்லல...முஸ்லிம்களுக்கு எதிரா சமீபமா நடந்துட்டு இருக்குற அடக்குமுறைக்கு எதிரா தான் சொன்னாரு. அப்படி ஒன்னும் நடக்கலைனு சொல்றவங்க மேற்கொண்டு விடாம படிச்சு உங்க மனசுக்குள்ளையே ஆன்சர் பண்ணிக்கங்க..

-முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறினால் மக்கள் தொகை குறையும்னு ஆதியத்நாத் எம்.பி ஒருத்தர் சொன்னாரு. அப்போ இவர் சொன்னதுக்கு எதிரா போராடுனீங்களா?

-ராமரை ஏற்காதவன் விபச்சாரிக்கு பொறந்தவன்னு ஹிந்து மஹா சபை அறிவிச்சானுக.அப்போ இவனுக சொன்னதுக்கு எதிரா போராடுனீங்களா?

-மசூதிகளை எங்களிடம் ஒப்படைத்து விட்டு செல்லுஙள்னு அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத்தார். அப்போ இவனுக சொன்னதுக்கு எதிரா போராடுனீங்களா?

-டெல்லி மகாராஷ்ரா பவன்ல் ரமலான் நோன்பிலிருந்த ஒரு இசுலாமிய ஊழியரின் வாயில் திமிர்த்தனமாக சப்பாத்தியைத் தினித்த சிவசேனா எம்.பி. விச்சாரே. இந்தாளுக்கு எதிரா குரல் கொடுத்தீங்களா?

-இந்தியா இந்துகளுக்கானது” இந்தியாவின் குடிமக்களான இஸ்லாமியர்களை 'நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்னு அசாம் ஆளுநர் இப்ப ரீசண்ட்டா சொன்னானே..அதுக்கு எதிரா போராட்டம் பண்ணீங்களா?

-இந்திய நாடாளுமன்றத்தில் சில தீவிரவாதிகளும் இடம்பெற்றிருப்பது, துரதிருஷ்டவசமானதுனு சாத்வி ப்ராச்சினு ஒரு லேடி எம்.பி சொல்லுச்சே..அதுக்கு எதிரா போராட்டம் பண்ணீங்களா?

-முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இருந்துதான் தேச விரோதச் செயல்கள் உருவாகுதுனு பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் சொன்னாரே...அவரை கண்டிச்சு போஸ்டர் ஒட்டுனீங்களா?

-சிறுபான்மையினர் 10 சதவீதத்துக்கு மேல் ஒரு பகுதியில் இருந்தாலே அங்கு வன்முறை ஏற்பட்டு விடுகிறது என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் சொன்னாரே..அப்போ ஏதாச்சும் முஸ்லிம்களுக்கு ஆதரவா குரல் கொடுத்தீங்களா?

-மாட்டை அறுப்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை :உத்தரகாண்ட் முதல்வர் சொன்னாரே..அதுக்கு அப்போஸ் பண்ணி அவன் அவன் தட்டுல இருக்குறது அவன் உரிமைனு சொன்னீங்களா?

-பீப் வச்சிருந்தார்னு ஒரு ஆளை அடிச்சு கொன்னானுகளே அப்போ ஏதாச்சும் அறிக்கை விட்டீங்களா?

இதுமாதிரி ரொம்ப இருக்கு. என்ன அமீர்கான் செலிபிரிட்டினால அவர் சொன்னது உங்களுக்கு பெருசா தெரிது. இதெல்லாம் காரணமா வச்சு தான் அமீர்கான் சொன்னாரு. அமீர்கான் பொண்டாட்டி தான் நாட்டை விட்டு போறதா சொல்லுச்சுனும் அதை கேட்டு ஷாக் ஆனதாவும் தான் சொன்னாரு மனுசன். ஆனா பயபுள்ளைங்க என்னமோ அந்தாளு தான் சொன்ன மாதிரி கதைகட்டிட்டானுக.

மேல நான் சொன்ன காரணமெல்லாம் லேட்டஸ்டா நடந்தது தானே? இதெல்லாம் நடக்க்கலைனு மட்டும் சொல்லுங்க பாக்கலாம்...இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மேல திணிக்கிற, ஒடுக்குற செயல்கள் தானே? அதையெல்லாம் தப்புனு எவனாச்சும் ஒருத்தன் அறிக்கை விட்டா உங்களுக்கு தேச துரோகினு படுது...

ஒன்னும் சொல்றதிக்கில்லபா..

Reply · Report Post