என்ன செய்ய போகிறோம்? - ஒரு முயற்சி


வணக்கம் நண்பர்களே பேச வேண்டிய விஷயம் இதை பற்றி தான்.

https://twitter.com/iamVariable/status/600192319539712000

சிறிது நாட்களுக்கு முன் @minimeens ஒரு ட்வீட் செய்தி ஷேர் செய்து இருந்தார் +2 வகுப்பில் 1124 மார்க் எடுத்த சகோதரி பற்றியது

https://twitter.com/minimeens/status/600188928252104704

பலராலும் அதிகமாக retweet செய்ய பட்டது. நிறைய நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்து இருகின்றனர். சிலர் அதை retweet செய்ததோடு மட்டும் இல்லாமல் சில NGO, தொண்டு நிறுவனங்களை, தன்ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள எண்களையும் கொடுத்திருந்தனர் அவர்கள் கவனிதற்கும் கொண்டு சென்று இருப்பர் நல்லது. அவர்கள் அவர்களால் முடிந்ததை செய்யட்டும் நாமும் நம்மால் முடிந்த உதவி ஏதும் செய்ய முடியுமா என்று அந்த மொபைல் நம்பர்ரை தொடர்பு கொள்ள முயன்றேன். நானாக தொடர்பு கொள்ளவில்லை முதலில் @Yaaro_ தான் 19 ஆம் தேதி செவ்வாய்கிழமை இந்த ட்விட்டை எனக்கு அனுப்பி இது தொடர்பான விவரங்கள் விசாரித்து சொல்லுமாறு கேட்டு இருந்தார். பின்பு @iamVariable ம் விவரங்கள் விசாரிக்க வேண்டும் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்றார். தொடர்புகொள்ள முயன்ற எண் swtich off என்ற செய்தி தான் மறுமுனையில் இருந்து எதிரொலித்தது. மீண்டும் @Yaaro_ விடம் தொடர்பு கொண்டு எந்த நாளிதழ்ழில் வெளிவந்த செய்தி என்பதை கேட்டு தமிழ் ஹிந்து என்றதும் நேரடியாக அவர்கள் அலுவுலகதையே தொடர்பு கொண்டு விவரங்கள் விசாரித்தேன். அவர்களிடமும் இந்த ஒரு தொடர்பு எண் தான் உள்ளது என்றனர்.

அதே நேரத்தில் @iamVariable தான் பதித்த ஒரு டுலா வையும் இங்கே படித்தேன் http://www.twitlonger.com/show/n_1sa0jav .
உண்மை தான் 100 பேர் 10 ரூபா கொடுத்தாலே பெரிய விஷயம் தான். ஆனால் முதலில் நாம் ஆரம்பிக்க வேண்டும் என்றே தோன்றியது. 500 1000 என்றால் கூட பரவாயில்லை நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

மீண்டும் அன்று மாலை முயற்சி செய்தேன் அதே போல்
"switch off" என்ற செய்தி மட்டுமே. மறுநாளும் மதியம் முயற்சி செய்தேன் தொடர்ந்து "switch off" என்ற செய்தி மட்டுமே. சரி அவர்களுக்கு உதவி கிடைத்து இருக்கும் போல என்று தான் ஓடியது. மறுநாள் @iamVariable காலையில் விவரங்கள் என்னாச்சி என்று கேட்க்க சரி மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் என்று தொடர்பு கொண்டு பேசி விவரங்களை அறிந்து கொண்டேன்.


முறையாக என்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடம் விவரம் கேட்டறிந்தேன். "ஏதோ எங்களால முடிஞ்ச அளவு படிக்க வச்சிட்டோம்பா. இனிமேல் என்ன செய்ய போகுதுன்னு தான் தெரில. ஏதாவது மேல படிச்சா அது வழிய அது பார்த்துக்கும்பா" என்றார்கள். அண்ணா பல்கலைகழகத்திற்கு application அனுப்பி வைத்து இருகிறார்கள். இது வரை ஒரு 30,000 சேர்ந்து இருப்பதாக சொன்னார்கள். வங்கி கணக்கை கேட்டு குறித்து வைத்து கொண்டேன். எவ்வளவு அனுப்பினாலும் மறக்காமல் ஒரு call பண்ணி சொல்லிடுங்கபா என்றார்கள். நண்பர்களுக்கு தகவலை சேர்த்து விட்டு சொல்கிறேன் என்றேன்.

விவரங்கள் இதோ,

Bank: Indian Overseas Bank
Acc holder name: A DHANALAKSHMI
Acc number: 052801000021607
Branch Code: 0528
IFSC Code: IOBA0000528


என்ன செய்ய போகிறோம் ?

ஒரு தமிழ் ட்விட்டர்கள் குழுவாக இணைந்து இதை செய்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஏன் என்றால் நான் 1000 தருகிறேன் என்று வைத்து கொள்வோம் நண்பர் ஒருவர் 500 தருகிறார். ஒவ்வொன்றுக்கும் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவிப்பதை விட ஒரு consolidate amount அவர்களுக்கு கொடுத்து விட்டால் நன்றாக இருக்கும். சிறு துளியாக சேர்த்து பெரு வெள்ளமாக தருவதற்கான முயற்ச்சி தான்.

எனது account number இதன் முடிவில் இணைத்துள்ளேன். சிறு துளியாக எனது account டில் சேர்க்க விருப்பம் உடையவர்கள் சேர்த்து விடலாம் இந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் அதாவது 25/05/2015 முதல் 1/6/2015 வரை. யார் எவ்வளவவு அனுப்பி வைத்து இருந்தாலும் எனக்கு DM மில் தெரிய படுத்தவும். அது தொடர்பாக தனி excell maintain செய்யபடும். 1/6/2015 அன்று தமிழ் ட்விட்டர்கள் சார்பாக அவர்களிடம் பேசி விட்டு சேர்ந்த தொகை அவர்களுக்கு அனுப்பி வைக்க படும். அதற்கான சான்றுகள் TL லில் இல்லாமல் DM மில் மட்டுமே share செய்ய படும்.

பி.கு: இந்த லிங்க்கை TLலில் share செய்ய வேண்டாம். விளம்பர படுத்துதல் தவிர்த்து நம்மால் முடிந்த உதவியை மட்டும் செய்வோம். உதவும் நல்ல உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு DM மட்டும் செய்யவும்.

Name: Prasath S
Bank: Indian Overseas Bank
Account NUmber: 135501000011134
Branch: Manjakuppam
Branch code: 1355
IFSC: IOBA0001355

நன்றி.

Reply · Report Post