தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்றது குறித்த சிலரின் கேலி கிண்டல்களுக்கு பதில்:-
1)ஜெயலலிதா 'மீண்டும்'முதல்வரானால் தமிழக ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது என்று சொன்னவர் ஆயிற்றே என்பது சிலரின் கேள்வி-அவர் கூறியது அந்த தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்-ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தரும் தண்டனை என்பது ஒரு தேர்தல் தோல்வி மட்டுமே,அவர் எவ்வளவு ஊழல் செய்திருந்தாலும் அதற்கு அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை அவர்களுக்கே மாற்றி மாற்றி தருவது என்பது கண் கூடு 1989முதல் 2011 வரையிலான தமிழக தேர்தல்களை பார்த்தாலே இது தெளிவாக தெரியும்.அப்படி இருக்க ரஜினி மட்டும் கடைசி வரை எதிர்த்துக் கொண்டேயிருக்க அவர் ஒன்றும் ஜெயலலிதாவிற்கு ஜென்ம விரோதியில்லையே.
2) தைரியலட்சுமி என்று ஜெயலலிதாவை பாராட்டி விட்டாரே என்பது சிலரின் கேள்வி.வி.சி.டி ஒழிப்பு,வீரப்பனை ஒழித்தார் என்று சில விஷயங்களுக்காக திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் பாராட்டப்பட வேண்டிய சில விஷயங்களை நடுநிலையோடு பாராட்டினார்,திரையுலகில் வந்து 40 ஆண்டுகள் ஆன நிலையில் தன்னை எதிர்த்தவர்களை கூட அவர் வசை பாடியதில்லை,இது தான் அவர் பண்பு,நாகரிகம்.மேலும் கலைஞர் முதல்வராக இருந்த போது அவர் முன்னிலையில் ஜெயலலிதாவையும்-ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அவர் முன்னிலையில் கலைஞரையும் பாராட்டி பேசிய ஆண்மை மிக்கவர் ரஜினியை தவிர வேறு எவருமில்லை.
3. தன் படம் வெளியாவதற்காகவோ அல்லது தன் சுயநலத்திற்காகவோ இதுவரை சூப்பர் ஸ்டார், கலைஞர்-ஜெயலலிதா மட்டுமல்ல வேறு எந்த அரசியல்வாதியிடமும் கையேந்தியதில்லை.
இதையெல்லாம் உணர்ந்திருந்தாலும் சிலர் மீண்டும் மீண்டும் திரித்து கூறுவதால் சூப்பர் ஸ்டாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முடியாது.தமிழ்நாட்டில் இந்தியாவில் மட்டுமல்ல-உலகிலேயே ஒரு துறையில் 38 ஆண்டுகள் "உச்சத்திலேயே"இருப்பவர் தலைவர் சூப்பர் ஸ்டார் மட்டுமே.வாழ்க ரஜினி.

Reply · Report Post