கோவை வனக் கல்லூரி மாணவர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைத்தால் நமக்கென்ன லாபம் என்று கருதாமல், உடனடியாக அவர்களின் கோரிக் கைக்கு முடிவு கண்டு அறிவிக்க வேண்டும்.

கேள்வி :- எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோவை வனக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து எடுத்துச் சொல்லியும், அ.தி.மு.க. அரசினர் கேளாக் காதினராக உள்ளனரே?

பதில் :- மாணவர்கள் போராட்டம் என்றாலே அ.தி.மு.க. அரசு அலட்சியம் காட்டத்தான் செய்கிறது. வனக் கல்லூரி மாணவர் போராட்டத் திலும் அரசு அலட்சியம் காட்டியதால், அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி அதிலே 23 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய முக்கிய கோரிக்கை, தமிழ்நாடு வனத் துறையிலே வனச்சரகர், வனவர் போன்ற பணி இடங்களுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது, வனத் துறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதுதான். இதிலே அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கடந்த 25 நாட்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வரும்போது, அவர்களை அழைத்துப் பேசுவது நியாயம் இல்லையா? முதல் அமைச்சரே அவர்களின் பிரதிநிதிகளை 20ஆம் தேதி சந்திக்கவிருப்பதாக ஏடுகளிலும் செய்தி வந்தது. முதல்வரைச் சந்திக்க வனக் கல்லூரி மாணவர் களின் பிரதிநிதிகள் ஆறு பேர் சென்னைக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவே இல்லை. ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணமும் அரசினால் கூறப்படவில்லை.

இதற்கிடையே அந்த மாணவர்கள் வனத்திற்குள் சென்று குடியிருக்கும் போராட்டத்தை அறிவித் தார்கள். இந்த நிலையில் வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்கள் வனத்திற்குள் செல்கின்ற போராட்டத் தையும், உண்ணாவிரதத்தையும் கை விட்டிருக் கிறார்கள். துணைவேந்தரும் கல்லூரி முதல்வரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வும், கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் செய்தி வருகிறது. ம.தி.மு.க. வின் சார்பில் இந்த மாணவர்களின் கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இவ்வாறு போராட்டம் அறிவித்து, பிரச்சினை பெரிதாக ஆக வேண்டுமென்று தமிழக அரசு காத்திருக்காமல், மாணவர்களின் எண்ணிக்கை குறைவுதானே என்று அலட்சியமாக இராமல், அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தால் நமக்கென்ன லாபம் என்று கருதாமல், உடனடியாக அவர்களின் கோரிக் கைக்கு முடிவு கண்டு அறிவிக்க வேண்டும்.

Reply · Report Post