ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு பத்து பேர் இறந்ததற்கு அரசின் அலட்சியம்தான் காரணம் என்று செய்தி வந்திருக்கிறதே?

பதில் :- இந்த விபத்து பற்றி 1-2-2015 அன்றே நான் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அரசின் சார்பில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுமென்று அறிவித்தார். நான் அந்தத் தொகை குறைவானது என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து இலட்ச ரூபாய் வழங்க வேண்டுமென்றும் எனது அறிக்கையிலே தெரிவித்திருந்தேன். இந்த விபத்து குறித்து மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து "உண்மை கண்டறியும்" முயற்சியிலே ஈடுபட்டார்கள். அந்தக் குழுவின் தலைவர் கூறும்போது, "வாரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் கழிவு நீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்த போது, விரிசல் இருந்தும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். அதில் சுத்திகரித்த திடக் கழிவு களைத்தான் சேமிக்க வேண்டும். சுத்திகரிக்காமல் திரவக் கழிவுகளைத் தொடர்ந்து சேமித்ததால் விபத்து நடந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தொழிலாளர் நல ஆணையமும் செயல்படவில்லை.
தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த அரசுத் துறைகள்தான் பலிக்குக் காரணம். பாதிக்கப்பட்டோருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு இன்னும் தரப்படவில்லை. அரசு சார்பில் ஆறுதல் சொல்லக்கூட யாரும் செல்லவில்லை. விபத்தைக் காரணம் காட்டி 80 நிறுவனங்கள் மூடப்பட்டதால் 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நிறுவனங்கள் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? விபத்து நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றால் அதற்குக் காரணம் யார்? ‪#‎DMK‬ ‪#‎Kalaignar‬ ‪#‎Karunanidhi‬ ‪#‎ranipetfire‬ ‪#‎OPS‬ ‪#‎tngovt‬

Reply · Report Post