KalaignarKarunanidhi · @kalaignar89
20th Feb 2015 from TwitLonger
தமிழக மீனவர்கள் கதி அதோ கதிதானா? #DMK #Kalaignar #Karunanidhi Maithripala Sirisena PMO India #tnfisherman
"மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை" என்பார்கள்! இலங்கை அதிபர் சிறீசேனா டெல்லி வந்து நம்முடைய பிரதமருடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கிறார். எனினும் தமிழக மீனவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக் கிறார்கள். அப்போது 5 சிறிய கப்பல்களில் இலங்கைக் கடற்படையினர் வந்திருக்கிறார்கள். தமிழகப் படகுகளைக் கண்டதும் அவர்கள் மீனவர் களை உடனடியாக அங்கிருந்து சென்று விடுமாறு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இலங் கைக் கடற்படையினர் நம்முடைய மீனவர்களை அடித்துத் தாக்கியதோடு, அவர்களின் மீன்பிடி சாதனங்களையும் கைப்பற்றி கடலிலே எறிந்திருக்கிறார்கள். அவர்களது தாக்குதல் காரணமாக டெம்பலஸ் என்பவரது படகிலே இருந்த மீனவர்கள் அந்தோணி, ஆரோக்கியசாமி, அருள், வரதராசன், நெக்லஸ், சேசு ஆகியோர் காயமடைந் துள்ளார்கள். அதுபோலவே குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடந்த 13ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் அங்கே வந்து இவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையெல்லாம் அள்ளிக் கொண்டு, இவர்களை விரட்டியடித்துள்ளார்கள். மோடி, சிறீசேனா பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஆகிய வற்றுக்குப் பிறகு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இருக்காது என்று நம்பியதற்கு மாறாக இந்த இரண்டு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக இதிலே கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களுக்கு ஒரு நிரந்தரப் பாதுகாப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.