கேள்வி :- நான்காண்டு காலம் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் என்று நீதிமன்றமே தண்டனை விதித்த ஒருவரை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் எல்லாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சென்று சந்தித்திருக்கிறார்களே, அது சரிதானா?

பதில் :- நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை தமிழக அமைச்சர்கள், அவர்களுடைய கட்சியின் தலைவர் என்ற முறையில் சென்று சந்திப்பதில் தவறில்லை. ஆனால் அரசு ஊதியம் பெறும் அதிகாரிகள், தண்டனைக்கு ஆளான ஒருவரைச் சென்று இவ்வாறு சந்திப்பது முறையல்ல என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்து. தமிழக அரசின் அதிகாரிகள், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா வைச் சந்தித்த போது, "அரசின் செயல்பாடுகள், பொங்கலுக்கு இலவசப் பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது" என்றெல்லாம் செய்தி களும் வந்துள்ளன. மேலும் இந்த ஆட்சியில் எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும், ஜெயலலிதாவின் ஆணைப்படியோ அல்லது விருப்பப்படியோ நிறைவேற்றுவதாகத் தான் வெளியிடுகிறார்கள். போக்குவரத்துத் தொழி லாளர்கள் பிரச்சினையில், "மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி 12வது ஊதிய ஒப்பந்தத்திற்கான 11 பேர் குழு அமைப்பு" என்றுதான் ஆளுங்கட்சி நாளேட்டில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டார்கள். காரணம், அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அப்படி யெல்லாம் செய்தால்தான் தாங்கள் பதவியிலே தொடர முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது. திரையரங்குகளில் கல்வித் துறை சார்பில் காட்டப்படும் விளம்பரத்திலே கூட முதலமைச்சர் ஜெயலலிதா என்றுதான் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு சார்பில் வெளியிடப்படும் "காலண்டரில்" முதல் அமைச்சரின் உருவப்படம்தான் இடம் பெறும். ஆனால் இந்த ஆண்டு முதல் அமைச்சரின் படமே அதிலே இல்லை. இதிலிருந்து தமிழகத் திலே யார் கூறுகிறபடி ஆட்சி நடைபெறுகிறது, இதெல்லாம் அரசியல் சட்ட நெறிகளின்படி முறைதானா என்பது சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் விசாரணை நடைபெறுகிற போதுதான் வெளிப்படையாகத் தெரியும். #DMK #Kalaignar #Karunaindhi

Reply · Report Post