KalaignarKarunanidhi · @kalaignar89
18th Jan 2015 from TwitLonger
கேள்வி :- திட்டக்குழு என்ற அமைப்பினை மத்தியக் கொள்கைக் குழு என்ற புதிய அமைப்பாக மாற்றியிருக்கிறார்களே?
பதில் :- "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையிலே வை" என்பதைப் போல மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றபோது, அவசர அவசரமாக பண்டித நேரு காலத்திலிருந்து கடந்த 65 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, "மத்திய கொள்கைக் குழு"" என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. கொள்கைகளை இந்தக் குழு வகுக்குமென்றால், அந்தக் கொள்கைகளை திட்டமாக தீட்ட வேண்டாமா? மேலும் இந்தக் குழு வுக்கு "நித்தி ஆயோக்"" என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. "நித்தி ஆயோக்" என்றால் என்ன பொருள் என்றே பொதுமக்களுக்கு விளங்க வில்லை. மத்திய அளவில் திட்டக்குழு கலைக்கப் பட்டு விட்டால், மாநிலங்களிலே தற்போதுள்ள திட்டக் குழுக்களின் கதி என்ன? தேவையில்லாத இப்படிப்பட்ட அறிவிப்புகளை மத்திய அரசு தவிர்த்து விட்டு மக்கள் நலம் நாடும் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவதில் கவனம் செலுத்தினால் நாட்டிற்கும் நல்லது, நாட்டு மக்களுக்கும் நல்லது.
#DMK #Kalaignar #Karunanidhi #NitiAayog