KalaignarKarunanidhi · @kalaignar89
18th Jan 2015 from TwitLonger
கேள்வி :- தொழிற்சாலைகளை மூடுவதில் தமிழகம்தான் முன்னிலை வகிப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?
பதில் :- 2012-2013ஆம் ஆண்டில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களின் பட்டியலில், தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக மின் தட்டுப்பாடு காரணமாக, தமிழகத் தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்பட்டதை அடுத்து, வேலை இழந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விவரங்கள் தொழிற்சாலைகள் பற்றிய மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சணத்தில், ஒரு இலட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாட்டைக் கூட்டப் போகிறார்கள் என்பது வேடிக்கையாக இல்லையா?
#DMK #Kalaignar #Karunanidhi