கேள்வி :- ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுத் தர அ.தி.மு.க. அரசு தவறி விட்டதே?

பதில் :- அ.தி.மு.க. அரசு எல்லாவற் றையும் போல, இந்தப் பிரச்சினையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத் தில் முறையான அனுமதியைப் பெற்றுத் தரத் தவறி விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சி எடுப்பது போல, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லி, அறிக்கைகள் விட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற உண்மையான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற பகுதியிலிருந்து வந்திருக்கும் பன்னீர் செல்வமே, அந்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றிடத் தவறி விட்டார். #DMK #Kalaignar #Karuanidhi

Reply · Report Post