மூத்த தமிழ்அறிஞர் - முனைவர் வா.செ.குழந்தைசாமி
கூறிய முத்தனைய கருத்து!

கடந்தமுறை நடைபெற்ற பொதுக்குழுவில் கழகத் தலைவராக - தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் - மூத்த அறிவியல் தமிழ் அறிஞருமான முனைவர் வா.செ.குழந்தைசாமிஅவர்கள், ‘முரசொலி’யில் கட்டுரையொன்று தீட்டியிருந்தார்கள். அதில்அவர்,

"திராவிடமுன்னேற்றக் கழகத்தின் இந்தப்பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவது யார்?" என்று ஒருவரிடம் நான் வினாத் தொடுத்தேன்.
அதற்குஅவர், "வேறு யார், தலைவர் கலைஞர்தான்!"
என்று பதிலுரைத்தார். அவர் மிகச்சாமான்யமாக ஓரிருவார்த்தைகளில் எனக்குப் பதில் கூறி விட்டுச் சென்றுவிட்டார்.

ஆனால் நானோ, "வேறு யார்?" என்று அவர் கூறிய சொற்களை, அதன் பின்னணியில் குவிந்து கிடக்கும் பொருளை ஒருக்கணம் சிந்தித்துப் பார்த்தேன். அஃது நினைக்கவே எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. பெருமிதமாகவும் இருந்தது.

"கட்சியின் தலைவர் பொறுப்புக்கு கலைஞரைவிட்டால் வேறு யார்?" - என்று அந்நபர் சர்வசாதாரணமாகக் கூறும் அளவுக்கு, அவரை உந்தியது எது? அந்த வார்த்தைகளின் பின்னணியில் தொக்கியிருப்பதுயாது? அஃது கலைஞரின் பெரும் உழைப்பன்றோ! தன்னலம் கருதாத அவரதுதியாகமன்றோ! பரந்து விரிந்தஅவரது பட்டறிவன்றோ! அவரது பன்முகத் திறமையன்றோ!
மேலும், ‘கழகத் தலைவர்’ எனும் பொறுப்பிற்கு, கலைஞர் அவர்களைத் தவிர, வேறு ஒருவரை அந்தநபரால் கருதிக்கூடப் பார்க்க முடியவில்லை எனும் எதார்த்தமும் உண்மையும் அந்த நபரின் வார்த்தைகளில் சுடர் விடுவதையும் காணமுடிந்தது. அந்தக் கருத்து - எண்ணம் என்பது அந்த நபருக்கு மட்டும் உள்ள ஒன்றல்ல.
தமிழ் கூறு நல்லுலகில் உள்ள ஒவ்வொருவருடைய எண்ணமும் அதுதான் என்பதைஎளிதில் உணர முடிகிறது.
கலைஞர் அவர்களின் உழைப்பு, தியாகம், ஆற்றல் அத்துணையையும் அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நலனுக்காகவும், அதனைக் காத்திடவுமன்றோ சிந்தியிருக்கிறார், என்பதை நினைக்கும் போது என் நெஞ்சமெலாம் நெகிழ்கிறது! உள்ளமெல்லாம் விம்முகிறது!" - என்று முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் குறிப்பிட்டது, இவ்வேளையில் நன்றியோடு நினைவு கூரத்தக்கதாகும். #DMK #Kalaignar #karunanidhi I Support DMK

Reply · Report Post