KalaignarKarunanidhi · @kalaignar89
8th Jan 2015 from TwitLonger
கழகத் தலைவராக கலைஞர் - தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு!
கழக நலனையே தமது ஊனோடும் உதிரத்தோடும் கலந்திட்ட உணர்வாகக் கொண்டுதன்னலம் மறந்து தமது இளம் பிராயம் தொட்டு பாடுபடுவதால் தானே "கழகத்தின் தலைவர்" எனும் மாபெரும் பொறுப்பு, தலைவர் கலைஞர் அவர்களை நாடிவந்து, அவரது அரசியல் பொதுவாழ்வுக்கு அணிசேர்த்தது!
பேரறிஞர் அண்ணாஅவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தைத் தலைமையேற்று நடத்திடும் பெரும் பொறுப்பினை தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்றார்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தின் தலைவராக - 27.7.1969 அன்று நடைபெற்ற 4வது பொதுக்குழுவில், முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக 7.7.1974 அன்று நடைபெற்ற 5வது பொதுக்குழுவிலும்,
மூன்றாவது முறையாக, 18.6.1978 அன்று நடைபெற்ற 6வது பொதுக்குழுவிலும்,
நான்காவது முறையாக, 25.6.1983 அன்று நடைபெற்ற 7வது பொதுக்குழுவிலும்,
ஐந்தாவது முறையாக 2.2.1988 அன்று நடைபெற்ற 8வது பொதுக்குழுவிலும்,
ஆறாவது முறையாக, 2.6.1992 அன்று நடைபெற்ற 9வது பொதுக்குழுவிலும்,
ஏழாவது முறையாக, 27.7.1997 அன்று நடைபெற்ற 10வது பொதுக்குழுவிலும்,
எட்டாவது முறையாக, 8.4.2000 அன்று நடைபெற்ற 11வது பொதுக்குழுவிலும்,
ஒன்பதாவது முறையாக 2.4.2003 அன்று நடைபெற்ற 12வது பொதுக்குழுவிலும்,
பத்தாவது முறையாக 27.12.2008 அன்று நடைபெற்ற 13வது பொதுக்குழுவிலும் தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இந்நிலையில் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க கழகத்தின் 14வது பொதுக்குழு நாளை (9.1.2015 - வெள்ளிக்கிழமை) சென்னை -அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறுகிறது. #DMK #Kalaignar #karunanidhi I Support DMK