KalaignarKarunanidhi · @kalaignar89
31st Dec 2014 from TwitLonger
பெங்களூரில் கடந்த 28.12.2014 அன்று இரவு நடந்த குண்டு வெடிப்பில் சென்னை அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த பவானி என்ற இளம் பெண் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி பலியான பவானியின் வீடு அண்ணா சாலை எல்.ஐ.சி. பின்புறம் உள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை பூபேகம் 2வது தெருவில் உள்ளது. பவானியின் தந்தை அன்புசாமி அவர்கள் கழக தோழர் ஆவார். அவரது கணவர் பாலன் சென்னையில் டயர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
உறவினர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருமதி பவானி தனது குழந்தைகளுடன் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது திருமதி பாவனி உறவினர் கார்த்திக் (22)குடன் பெங்களூரூவில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்குச் சென்றுவிட்டு எம்.ஜி.ரோடு சர்ச் சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போதுதான் பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி தூக்கி வீசப்பட்டு திருமதி பவானியும், கார்த்திக்கும் படுகாயம் அடைந்தனர். ஆட்டோ டிரைவர் நரசிம்கா என்பவர் முன்வந்து பவானியை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி இறந்துள்ளார்.படுகாயம் அடைந்த கார்த்திக் பெங்களூர் லால்பார்க் அருகே மாவலியில் தங்கி அங்குள்ள தயானந்த சாகர் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். விடுமுறைக்காக பவானியின் சென்னை வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் பவானியுடன் பெங்களூரூ சென்றார்.
இந்த சம்பவத்தின்போது பவானி யின் குழந்தைகள் லட்சுமிதேவி, பாரத் ஆகியோர் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் விளையாடிக் கொண்டு இருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். திருமதி பவானியை இழந்துவாடும் அவரது தந்தை அன்புச்சாமிக்கும், கணவர் பாலனுக்கும் அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். #DMK #Kalaignar #karunanidhi #tamilnadu #Bangalore #Bhavanadevi