மக்கள் அங்கீகாரம் பற்றி கமல்.

அன்பேசிவம், பொங்கலுக்கு வெளியானது. படம் எடுபடவில்லை. 25.1.2005 அன்று சென்னை புத்தக கண்காட்சி இறுதி நாள் அன்று கமல் தலைமை ஏற்று பேசினார். "நல்ல படங்களை எடுத்து வருகிறேன், மக்கள் அவற்றை அங்கீகரிக்கவேண்டி காத்திருக்கிறேன், ஆனால், 25 வருடம் என்பது அநியாயம்" இதில், 25 வருடம்(அது சரியான தகவலா என்பது வேறு) காத்திருக்கிறேன் என சொன்னது, ஒரு கலைஞனின் பொறுமையை சொல்கிறது. இந்த பொறுமை, எல்லா கலைஞர்களுக்கும் இருக்கிறதா?!? மக்கள் அங்கீகாரம் கிடைக்காத எத்தனையோ கலைஞர்களின் மிக நல்ல எழுத்துக்கள், ஓவியங்கள், இசை ஆக்கங்கள், சினிமா படங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அதே சமயம் மக்களை எந்த குறையுமே சொல்லாமல் இருக்கவேண்டும் என்றல்ல. ஒரு படத்துக்கு, விருதுகள் எந்தளவு முக்கியமோ அதே அளவு மக்கள் அங்கீகாரமும். அது வசூலாகவும், பாராட்டாகவும், அடுத்த பட வாய்ப்புக்களாகவும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை மிக முக்கியம். "ஆர்ட் ஃபிலிம் என்பது ஒரு கெட்ட வார்த்தை" என்றார் கமல். அவரின் குணா, மகாநதி, ஹேராம் படங்களில் (ட்ரெண்டில் இருக்கும், வெற்றிபெற்ற)வெகுஜன வணிக அம்சங்கள் சற்று குறைவு தான். ஆனாலும் அவற்றை ஆர்ட் ஃபிலிம் என சொல்வதை அவர் வெறுத்தார். "இந்தப்படங்களிலும் தான், காதல் காட்சிகள், பாடல்கள், நகைச்சுவை, வணிக அம்சங்கள் உள்ளன" என்றார். தன்னுடைய படத்தை, ஒரு கலைஞனே, ஆர்ட் ஃபிலிம் என தனித்து பிரித்துவைத்து, இது உயர் ரசனை கொண்ட மக்களுக்கு மட்டுமேயான படம் என்ற போக்கை மறைமுகமாக காட்டுவது கூட தவறுதான். படத்தின் வணிக வெற்றி பற்றி ஒரு இயக்குனர் கவலையே படாமல் இருப்பது, அந்த பட தயாரிப்பாளருக்கும், ஏன், சினிமாவுக்குமே செய்யும் துரோகம்.

அதே சமயம், மக்கள் ரசனை சரியில்லை, அதனால் தான் என்படங்கள் எடுபடவில்லை என்பது, இன்றைய தேதியில், அதுவும் தமிழகத்தில் நிச்சயம், குறையான வாதம் தான்.
===================Diggression=======================
இசையை பொறுத்தவரை, மக்களின் ரசனை இன்னும் பலப்பல வேறு, வெளிக்காரணிகளையும், பாப்புலர் பேட்டர்ன், போன்ற பல விஷயங்களையும் சார்ந்திருக்கிறது. Highly Experimental Musicஇற்கும், இசையை அலசி நுட்பங்களை காணுவதிலும் வெகுஜனங்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. இன்றும், பிரபலமான பேட்டர்ன் இசை வடிவங்களையே தேடிப்போகின்றனர். ஆனால், சினிமா கண்டெண்ட் என்பது என்று, டிவி சீரியல்களாகவும், குரும்படங்களாகவும் பரவி விட்டது. மக்கள், சினிமாவை, மிக ஆழமாக அலசி துவைத்து காயப்போடுவது, காய்ந்தபின் விரும்பி அணிந்துகொள்வதும், முன்பை விட மிக அதிகமாக நடக்கிறது! ஆனால் இசையில் இந்தளவு ஆர்வம் இல்லை. சினிமா தாண்டி, சீரியலில் வரும் இசை, டிவி தொடர்கள், குறும்படங்களில் வரும் இசையை மக்கள் கவனிப்பதில்லை. அதனால்தான், வெகுநாட்களாக, தனி இசை ஆல்பங்கள் வெற்றிபெறவே இல்லை.
===================End of Diggression=======================
ஆனால் சினிமா அப்படி இல்லை. மேற்சொன்னதுபோல், மிக பரவலாக பேசப்படுகிறது. அதன் விளைவாக, நேற்று, ஓடாது என இருந்த பல கதைகள் இன்று, ஓடுகின்றன, எடுபடுகின்றன, ஆடியன்ஸ் பார்வை விழுகின்றது. பல புதிய இயக்குனர்களும், எக்ஸ்பெரிமெண்டல் களங்களை படமாக்கி ஜெயிக்கவும் செய்கின்றனர்! எனவே, மக்களை குறை சொல்லும் பிசினஸ், இப்போது, Out of Fashion!

ஒரு நல்ல சினிமா, சமையல் போலிருக்கவேண்டும் என்பார் கமல். உப்பு காரம் சுவை கூடலாம் குறையலாம், ஆனால் மக்களை அரங்கு நோக்கி இழுக்கும் அம்சங்கள் இருக்கவேண்டும் என்பார். பின்னே, ஒவ்வொரு படத்தின் பின்னும் ஒரு தயாரிப்பாளரின் பணம் இருக்கிறதல்லவா?!?

எல்லாவற்றையும் மீறி, வணிக தோல்வி தவிர்க்கமுடியாதது. அது ஏற்பட்டால், எதனால் அது நடந்தது என அலசும் பண்பும் கலைஞனுக்கு தேவை. அன்பே சிவம் தோற்றது, கமல், அவ்வப்போது, வெளிப்படையாகவே அதற்கு மக்களின் ரசனையை பிழை சொன்னார். கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்தது. அந்தப்படத்தின் கூடவே வெளியாகி வெற்றி பெற்ற விக்ரமின் தூள் படத்தை பற்றி யாரும் பேசுவதில்லை. இப்போதும் பார்த்து ரசிக்க அதில் விஷயங்கள் இருந்தாலும் அது ஒரு மசாலா படம். அதுபோல் பல படங்கள், பின்னர் வந்துவிட்டன, இனியும் வரும். ஆனால் அன்பேசிவம், நல்லபடம், இதை தியேட்டரில் மிஸ் பண்ணிவிட்டோம் என பலரும் கூறுவதே கமலின் வெற்றி.

ஆனால், மற்ற தோல்விப்படங்களுக்கும் கமல் அதையே சொல்கிறாரா?!? ஹேராம், அவரின் மிகச்சிறந்த படைப்புக்களில் ஒன்று. ஆனால் அதன் தோல்வி பற்றி கேட்டால், " ஒரு தலைமுறைக்கு தெரியாத விஷயத்தை படமாக எடுக்கும்போது, அவர்களுக்கு அதைப்பற்றி முன்கூட்டியே சொல்லத்தவறியது என் பிழை என நினைக்கிரேன். ஒருவேளை, இது இன்னும் முன்பே வந்திருந்தால், நிறையபேருக்கு, சுதந்திரகால நினைவுகள் ஆர்வம் அதிகம் இருந்திருக்கும், படமும் வென்றிருக்கும்" என அடக்கமாக சொன்னார். இன்றும் ஹேராம் பற்றி, அன்பே சிவம் அளவு இல்லாவிட்டாலும், ஓரளவு பேர், நல்ல படம், தவறவிட்டுவிட்டோம் என்கின்றனர். அதையும் மீறித்தான், கமல், தன் பக்கம் உள்ள தவறை அவரே ஏற்றுக்கொள்கிறார். முதலில், அந்தப்படம் ஏன் தோல்வி என கேட்கும்போது, கேள்வியை கனிவுடன் எதிர்கொள்கிறார்! பலப்பல வணிக வெற்றியை அவர் கொடுத்திருந்தாலும், இந்தியா முழுக்க எந்த நாயகனுமே முரியடிக்கமுடியாத சில வணிக சாதனைகளை அவர் படங்கள் செய்திருந்தாலும், மக்களும் மீடியாவும், அவர் படங்கள் பற்றின தோல்வி குறித்த கேள்விகளை கேட்காமல் இருப்பதில்லை. அப்போதும் அதை பக்குவமாக எதிர்கொள்கிறார்.

அதேபோல், மும்பை எக்ஸ்ப்ரெஸ் பட தோல்வி பற்றியும், அவர் பக்கம் தான் சில விஷயங்கள் சரியில்லை என்கிற தொனியில் இரண்டு பேட்டிகளில் சொல்லி இருந்தார்.

நம்மவர், மன்மதன் அம்பு போன்ற படங்கள் சுமாராக ஓடினாலும் அதற்காக மக்களை குறை சொல்லவில்லை. ஹேராம், குணா, மகாநதி படங்களின் தோல்விகளுக்கு மக்கள் ஒரு காரணம் என்று பக்குவமாக சொன்ன அவர், ஒருபோதும் நம்மவர், மும்பை எக்ஸ்பிரெஸ், மன்மதன் அம்பு போன்ற படங்களுக்காக, மக்களை, அவர்களின் ரசனையை குறை சொன்னதில்லை. இத்தனைக்கும், என்னதான் வணிக வெற்றிகள் பல தந்தாலும், அவரது சில தோல்விப்படங்களை மக்களும் மீடியாவும் பூதாகரமாக பார்த்து, வர்ணித்து பேசி, அவரை கிட்டதட்ட டேஞ்சர் சோனில் பலமுறை வைத்திருந்தது. ஆனாலும் அவர் பதறியதில்லை.

இந்த விஷயங்கள் அனைத்தும், சில இன்றைய 'அறிவுஜீவி' இயக்குனர்களுக்கு பயன்படலாம்!

Reply · Report Post